|
தமிழ் மொழி வரலாறு 192
வழக்கு மொழியிலிருந்து
மறைவு
மேலே
கூறப்பட்ட கருத்துக்குச் சான்று தரும் வகையில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி
சாசனங்களில் ‘ஈது
¥
இது’ என்ற மூன்று மாற்று வடிவங்கள் காணப்படுகின்றன. 1077 ஆம் ஆண்டுக் கல்வெட்டிலும் ஆய்தம்
காணப்படுகிறது. ‘திருவெஃகா’ இதற்குப் பின்னர் இலக்கிய வழக்குத் தவிர ஏனைய இடங்களில்
ஆய்தம் மறைந்து விட்டது.
இலக்கியத்தில் வரும் வேறு வகை
ஆய்தம்
ஆய்தம்
வரக்கூடிய சூழ்நிலைகளுக்கு இடையில் வேறுபாடு உண்டு. ஆய்தம் யகர மெய்யின் மதிப்பைப் பெற்று
வருகையில் அது மொழிக்கு முதலில் வரக்கூடிய மெய்களுக்கு முன்னரே வரும்.12
யகர மெய் நுனியண்ண அல்லது நாவளை வெடிப்பொலிகளுக்கு முன்னர் வராது. ஆனால் நன்னூலார்
காலத்தில் கூட ஆய்தம் அவற்றுக்கு முன்னர் வருகிறது. இவ்விடத்தில் வரும் ஆய்தத்தை வேறொரு
நிலையில் ஆராயவேண்டும். இங்கு ஆய்தத்தின் மதிப்பு குரல்வளை ஒலிப்பிலா உரசொலி (h)
யாகலாம். அரைமாத்திரை அளவுடைய, யகர மெய் மதிப்பைப் பெறும் முன்னர்க் கூறப்பட்ட
ஆய்தத்திலிருந்து இவ் ஆய்தத்தை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். யகர மெய்யின் மதிப்பைப்
பெறும் ஆய்தம் முற்றாய்தம் எனப்படும். இது முழுவதுமாக உச்சரிக்கப்படும்: இதனுடைய அளவு ஒரு
மாத்திரையாகும். மற்றது ஆய்தக்குறுக்கமாகும்; இதனுடைய அளவு அரை மாத்திரையாகும். பல்லவர்
காலத்து அவிநயம் ஆய்தம் குறுகுதல் பற்றிக் குறிப்பிடுகிறது.13
7. 0. உருபனியல்
7. 1. பொது
அ. உருபுகள் சொற்களாக
உயிர்கள்
உடம்படுமெய்யின்றி வருகின்றன. குறிப்பாக இகரத்தை அடுத்தும், ஓர், இல், உம் ஆகிய
விகுதிகளுக்கும் உயிரில்
|
12.
தொல்காப்பியம், 29.
“யரழ என்னும்
புள்ளி முன்னர்
முதலா கெழுத்து
ஙகரமொடு தோன்றும்.”
13.
நன்னூல், 23 ஆவது நூற்பா,
மயிலைநாநர் உரை.
|
|