|
தமிழ் மொழி வரலாறு 193
தொடங்கும் வேற்றுமை
உருபுகளுக்கும் முன்னர் உடம்படுமெய் வருவதில்லை. இவை இடையீட்டுடன் உச்சரிக்கப்படுகின்றன
என்பதை இது காட்டுகிறது. வேரற்ற உருபுகளைத் தொல்காப்பியர் சொற்களாகக் குறிப்பிடுவதை
இங்கு நினைவிற் கொள்ளலாம்.
ஆ. பழைய வடிவங்கள்
முன்னரே
ஆராயப்பட்டது போலப் பொதுவாக மூக்கொலியுடன் வரும் வினை வடிவங்கள் தன்வினைகளாகும்;
வெடிப்பொலிகளுடன் வரும் வடிவங்கள் பிறவினைகளாகும். ஆனால் கல்வெட்டுக்களில்
மூக்கொலியுடன் வரும் சில வடிவங்கள் பிறவினைகளாக வருகின்றன. வெடிப்பொலியுடன் வரும்
பிறவினை வடிவங்கள் இருந்த பொழுதிலும் இவை இங்ஙனம் வருகின்றன.
சான்று :
‘அழுத்து’ என்பதற்குப் பதில் ‘அழுந்து’
‘தவித்தன’ என்பதற்குப் பதில் ‘தவிந்தன’
‘தவித்து’ என்பதற்குப் பதில் ‘தவிந்து’
தொடக்கத்தில்
‘தன்வினை’, ‘பிறவினை’ என்ற பாகுபாடு இல்லை என்பதை நிறுவுவதற்கு இத்தகைய கிளைமொழி
மாற்றங்கள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன.
இ. ‘கில்’ என்னும்
இடைச்சொல்
‘கில்’ என்னும் புதிய
இடைச்சொல் பல்லவர் காலத் தமிழில் இடம் பெறுகிறது. இதனுடைய தோற்றம் புதிராக உள்ளது.
இது தனி வேராக வினைமுற்றாக்கவும்படுகிறது.
சான்று : ‘உண்ணவே’14
‘உண்ணகிலான்’
போன்ற சொற்களில் உள்ள ‘கிலான்’ என்பது ‘கில்’ என்ற வேரை உடைய தனி எதிர்மறைச்
சொல்லாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் ‘கிற்பான்’ என்பது போன்ற
சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். எதிர்மறை வினைமுற்று தன்னுடைய கடைசி உருபில்
ஒருநெடிலுயிரைப் பெற்றுள்ளது. எதிர்மறையைக் காட்டும் ‘இல்’ என்னும் வேரிலிருந்து வந்த
சொற்கள், ஒப்புமையாக்கத்தால் எதிர்மறை வினைமுற்றுக்களைப் போல விகுதியில்
நெட்டுயிரைப் பெறுகின்றன.
சான்று : ‘இலாத’
‘இலாது’
‘இலான்’
|
14.
திருவாசகம் : திருச்சதகம், 41.
|
|