பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

203

பாட்டைக் குறிப்பதற்கு இம்முறையே தமிழ் வரிவடிவத்தில் இன்றும் மரபாக உள்ளது.

சான்று : Sulphile > Calpaitu (சல்பைடு)

Sulphate > Calpettu (சல்பேட்டு)

வெளிநாட்டவர்களான பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால்தே, பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீகன் பால்கு, வீரமாமுனிவர், பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கால்டுவெல் முதலியோர் எழுதிய இலக்கண நூல்களில் வெடிப்பொலிகள் ஒலிப்புடை ஒலிகளாவது நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஒலிப்பிலா ஒலிகள் ஒலிப்புடை ஒலிகளாகும் விதி என்று கால்டுவெல் இதனைக் குறிப்பிடுகிறார். வெடிப்பொலிகள் மொழி முதலிலும் மொழி இடையில் நெடிலாக வருமிடங்களிலும் ஒலிப்பின்றி வருகின்றன; உயிரிடையில் வரும் பொழுதும் மெல்லின மெய்களுக்குப் பின்னர் வரும் பொழுதும் வெடிப்பொலிகள் ஒலிப்புடை ஒலிகளாக வருகின்றன. இடையண்ண வெடிப்பொலி மொழி முதலிலும் உயிரிடையிலும் குழிந்துரசொலி (Sibilant) ஆகிறது. சீகன்பால்கு இதனைத் தடையுரசொலியாகத்(Affricate) தம்முடைய வரிவடிவத்தில் எழுதியுள்ளார். அரிசனங்களின் பேச்சில் இவ் உச்சரிப்பு இன்றும் வழங்கப்படுவதைக் காணலாம்.

3. 2. 2. நுனியண்ண ஒலிகள்

பழைய நுனியண்ண வெடிப்பொலியான றகர மெய் உயிரிடையில் ‘-ர்ர்’ என எழுதப்படுகிறது. மெல்லின மெய்யைத் தொடருமாயின் அது -dr- என எழுதப்படுகிறது. இது ஒலிப்புடை நாவளை வெடிப்பொலியும் ரகர மெய்யும் சேர்ந்த மெய்ம் மயக்கமாகும். நெடில் நுனியண்ண வெடிப்பொலி, நெடில் நுனிநாப்பல் வெடிப்பொலியாக உச்சரிக்கப்படாத பொழுது கற்றவர்களால் ‘tr’ என உச்சரிக்கப்படுகிறது. இது ஒலிப்பிலா நாவளை வெடிப்பொலியும் ரகர மெய்யும் சேர்ந்த மெய்ம் மயக்கமாகும்.

சான்று : நேற்று > நேத்து > நேட்ரு.

3. 3. றகர மெய்

அ. முந்தைய காலத்திலேயே நிகழ்ந்ததாகச் சுட்டிக் காட்டப்பெற்றது போல நெடில் நுனியண்ண வெடிப்பொலி, நெடில் நுனி நாப்பல் ஒலியாகிறது.