|
தமிழ் மொழி வரலாறு 204
ஆ. உயிரிடை ரகர
மெய்யும் றகர மெய்யும் ரகர மெய்யாக ஒன்றாதல், இறுதி அசைக்குக் கூட நன்கு
நிறுவப்பட்டுள்ளது.
இ. ரகர
மெய்க்குப்பின்னர் வரும் உகரம் இழக்கப்படுகிறது.
சான்று : வயிறு
> வயிரு > வயர்
மேரு >
மேர்
ஈ. ஆனால்
மெல்லின மெய்க்குப் பின்னர் வரும்பொழுது, அன்றில் என்பது போன்ற வழக்குகள் சிலவற்றில்
நுனியண்ண வெடிப்பொலியின் பழைய உச்சரிப்பு மாறாது உள்ளது.
மற்ற
இடங்களில் நுனியண்ண வெடிப்பொலி மூக்கொலியாகிறது. ஆனால் இதன் விளைவாக வரும் நெடில்
மூக்கொலி நாவளை ஒலியாகும். தமிழகமெங்கும் வழங்கும் இன்றைய கிளைமொழிகளில் இதுவே
நிகழ்ந்து வருவது. சான்று : ஒன்று > ஒண்ணு
உ. சில
இடங்களில், குறிப்பாக ‘உன்றன்’ என்பது உந்தன் என்றாகிறது. இது தகரத்தைச் சந்தி
விகாரம் ஏதுமின்றி உச்சரிப்பதன் விளைவாகலாம். இன்றும் இது இவ்வாறே உள்ளது.
ஊ. ந்த் >
ண்ட்
பழங்காலத்தில், வீரசோழியம் குறிப்பிடுவதுபோல, ழகர மெய் ளகர மெய்யாகச் செயற்படும்
பொழுது ‘சூழ்ந்த’ என்பது ‘சூண்ட’ என்றாகிறது. ‘மீள்’ என்பது ‘மீள்ந்த > மீண்ட’ என்றாவது
போல) இவ்ஒப்புமையாக்கத்தால் ழகர மெய் இல்லாதபொழுதும் ‘ஏந்தலர்’ என்பது ‘ஏண்டலர்’
என்றாகியிருக்கக் கூடும். ஆனால் இவை அருகிய வடிவங்களாகும்.
3. 3. 1. வல்லின
மெய்கள்
வல்லினமெய்
மயக்கங்களில் முதலாவது வல்லினமெய் ஓரினமாதல் என்னும் விதிப்படி வல்லினமெய்யாக ஆகிறது.
|
சான்று : |
மாட்சி |
> |
மாச்சி |
|
|
முற்பிறவி |
> |
முப்பிறவி |
|
|
அற்பம் |
> |
அப்பம் |
பி்ற மெய்களும்
கூட இவ்வாறு ஓரினமாதல் விதிப்படி மாறுகின்றன. ஆனால் அவை பின்னிலை ஓரினமாதலாக (Regressive)
நிகழ்கின்றன.
சான்று :
செல்வம் > செல்லம்
|