பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

205

அ. க் > ய்

ககர மெய்க்கு முன்னர் அல்லது அதை அடுத்து இகர உயிர் வருமாயின், அம்மெய் யகர மெய்யாக மாறுகிறது.

கன்னிகள் > கன்னியள்
துகில் > துயில்

எனவே ககரம் யகரமாகத் திரிவதாகக் கொள்ளப் பெற்றது. இதனாலேயே கீழ்க்கண்ட மரூஉ வடிவங்கள் அமைந்துள்ளன.

ஆ. ய் > க்

இடையூறு > இடைகூறு

மொழியிடை வெடிப்பொலி இழக்கப்படுவதும் உண்டு. -ங்க் > -ங்-

சான்று: நாங்கள் > நாஙள்

இது ‘நாங்கள் > நாங்ஙள் > நாஙள்’ என்றாயிருக்க வேண்டும். ‘நாஙள் > நாமள்’ என்பது ‘நாம்’ என்னும் வடிவம் இருப்பதால் ஏற்பட்டதாகும். மொழியிடையில் உள்ள மகரமெய் தெலுங்கிற் போலப் பகர மெய்யாவது தெலுங்கு மொழி பேசுவோர் திருநெல்வேலியில் குடியேறியதன் விளைவாகலாம். இதனால் கிடைக்கும் வடிவம் ‘நாம்பள்’ என்பதாகும்.

இ. ப் > வ்

சமஸ்கிருதச் செல்வாக்கால் பகர மெய் உயிரிடையில் மட்டுமின்றி ஒலிப்பிலா மெய்களுக்குப் பின்னரும் வருகிறது. இவை தமிழில் ஒப்புநிலைக்கேற்ப விடுப்பொலிகளைப் (releases) பெறுகின்றன.

ஈஸ்வரன் > ஈஸ்பரன்

வகர உடம்படு மெய்கூடச் சில இடங்களில் மூக்கொலிச் சாயல் பெற்று மூக்கொலியாகிறது.

சான்று : என்ன + ஓ > என்னவோ > என்னமோ

மூக்கொலிகள் வருவதால் இவ்வாறு நிகழ்வதாக விளக்கலாம். ஆனால் ‘கவிய > கமிய’ என்பதை நோக்குக. (இங்கு மூக்கொலி ஏதும் சூழலாக அமையவில்லை.)

3. 3. 2. மூக்கொலிகள்

அ. ன் > ம்

பழைய நுனியண்ண மூக்கொலியான னகரமெய், நெடிலுயிர்களுக்குப் பின்னரும் மகர மெய் போன்ற மெல்லின மெய்களுக்குப் பின்னரும் இழக்கப்படுகிறது.