பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

206

சான்று : நான்முகன் > நாமுகன்

பிற மூக்கொலிகளுக்கு முன்னர் மறையும் மகர மெய்யாக எல்லா மூக்கொலிகளும் மாறுகின்றன. அடுத்து வரும் வெடிப்பொலியினுக்கேற்ற இனமூக்கொலியாக அவை மாறுகின்றன.

சான்று :

மாண்பு

>

மாம்பு

வெண்சாமரை

>

வெஞ்சாமரை

இன்சொல்

>

இஞ்சொல்

நன்மூர்த்தி

>

நம்மூர்த்தி

3. 3. 2. ஆ.

- ம் > ழூ > ம்

பண்பைக் குறிக்கும் சில சொற்கள் இரு வடிவங்களை உடையன.


1. வெடிப்பொலியுடன் தொடங்கும் சொற்களுக்கு

முன்னர் மூக்கொலியில் முடியும் வடிவங்கள்.

சான்று : அருங்கலை

2. வெடிப்பொலியில்லா ஒலிகளுடன் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் மூக்கொலியல்லா         ஒலிகளுடன் முடியும் வடிவங்கள்.

சான்று : அருவிலை

ஒப்புமையாக்கத்தால் மூக்கொலி முடிவு எல்லா இடங்களிலும் தோன்றுகிறது.

சான்று : பூம்வாவி

இப்போக்கு தற்காலத்தில் நன்கு நிலைபெற்று உள்ளது.

3. 3. 2. இ. இடையின மெய்கள்

மொழியிறுதி ரகர, லகர, லகர மெய்களின் இழப்பு பின்வரும் சொற்களில் காணப்படுகிறது.

தூண்டில்

>

தூண்டி

தண்ணீர்

>

தண்ணி

மொழி இடையில் கூட ய், ர், ல் முதலியன தொடர்ந்து இழக்கப்படலாயின. இது சோழர் காலத்துத் தமிழிலும் வழங்கியதைக் கண்டோம்.

வாய்க்கால் > வாக்கா