|
தமிழ் மொழி வரலாறு 207
பின்னர் இது
அநேகமாகப் பொதுவானதொரு வழக்காகவே ஆகிவிடுகிறது. நீண்ட ஓரசையின் இறுதியில் ரகரமெய் புகுத்தப்படும் நிலையும் உண்டு.
|
சான்று : |
கா |
> |
கார் |
|
|
கோ |
> |
கோர் |
இது இன்றும்
வழக்கில் உள்ளது.
ஒரு வேளை லகர
மெய்க் கிளை மொழிகளும் ரகரமெய்க் கிளை மொழிகளும் என இருந்திருக்கக் கூடும். பழைய
இலக்கண ஆசிரியர்களால் குறிக்கப்பெற்ற மாற்றத்தை நோக்குக.
பந்தல்
> பந்தர்
சாம்பல்
> சாம்பர்
ற், > ர்,
மாற்றம் இருக்கும் பொழுதும் ரகர மெய்யும் லகர மெய்யும் உறழ்(ச்சி) ஒலிகளாக வருகின்றன.
அரற்றி > அலற்றி
கழறுக
> கழருக > கழலுக
4. உருபனியல்
4. 1 வினை
4. 1. 1. பழைய
வடிவங்கள்
4. 1. 1. அ. மாற்று
வடிவங்கள்
‘ஈந்து’,
‘ஈத்து’ என்பதற்கு இணையான மாற்று வடிவங்கள் இக்காலத்திலும் வருகின்றன.
‘வளர்த்து’ என்பதற்கு ‘வளர்ந்து’.
‘பூட்டு,
என்பதற்கு ‘பூண்டு’.
4. 1. 1. ஆ. ஒரு
வினைமுற்று வடிவம்
பதினெட்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த குற்றாலக் குறவஞ்சியில் அதன் ஆசிரியர் திருநெல்வேலி மாவட்டக்
கிளைமொழி வழக்குகளையும், குறவர் சமூக வழக்குகளையும் புகுத்தியுள்ளார். குறவர் சொல் வழக்கு
அமைப்பு (Word Pattern) ஒன்று மட்டும் இங்கு ஆராயப்படும். படர்க்கை நிகழ்காலப் பலவின்பால் வினைமுற்று
‘போகின்னும்’ என வருகிறது. இதனது வாய்பாடு ‘வேர் + இன் + உம்’ என்பதாகும். பன்மையைக்
குறிக்கும் பழைய விகுதியான மகர மெய் ‘உம்’ என்பதில் உள்ளது. இதற்கு முன்வரும் ‘இன்’
விகுதி இறந்தகாலம் காட்டவில்லை. ‘செய்யுன்’ என்னும் பழைய
|