|
தமிழ்
மொழி வரலாறு 208
வாய்பாட்டை
இது நினைவுபடுத்துகிறது. உகரம் இங்கு இகரமாக மாறியுள்ளது.
னகர விகுதி ஒருமையைக் காட்டும் நிலை வழக்கிழந்தது.
வழக்கு மிகுதியான செய்யும் என்னும் வடிவத்தோடு
ஒப்புமையாக்கமாக மகர மெய் சேர்க்கப்பட்டது.
தெலுங்கில் உள்ள சேயுனு வாய்பாடு மகர மெய்யுடன்
வருவதாகக் கருத இடமுண்டு. ஈற்றில் உள்ள உகர மெய், அதற்கு
முன்னர் உள்ள னகர மெய்யால் மூக்கொலிச் சாயல்
பெறுவதன் விளைவு இதுவாகலாம். மூக்கொலிச் சாயல் பெற்றது
மெல்லின மெய் ஒன்று சேர்த்து எழுதப்பட்டது. (செயினும்)
செய்யும் என்பதனோடு கூடிய ஒப்புமையாக்கமும்
இங்குச் செயற்படுவதாகலாம்.
4. 1. 2. 1.
அ. சொல்லாக்க அசையுடன் கூடிய வேர்கள்
இக்கிளை மொழியில் மேலும் மேலும் பல
சொற்கள் சொல்லாக்க விகுதியைப் பெற்று வருகின்றன. |
அழு |
+ |
கு |
> |
அழுகு |
சிற |
+ |
க்கு |
> |
சிறக்கு |
தழை |
+ |
க்கு |
> |
தழைக்கு |
தரு |
+ |
கு |
> |
தருகு |
கண்ட
என்பதற்குப் பதில் காண்ட என்பது போன்ற
வடிவங்கள் காணப்படுகின்றன. பழங்காலத்துக்
கிளைமொழிகளிலும் இது காணப்படுகிறது.15
4. 1. 2. 1.
ஆ. அவற்றிலிருந்து வரும் தொழிற்பெயர்
பல் என்னும் வேர் வினையாவதற்கு, குகரச்
சொல்லாக்க அசையைப் பெறுவதற்கு முன்னர் ஓர்
உகரத்தைப் பெறுகின்றது.
பல் + கு > பலுகு
ககரத்தை இரட்டிக்க இது தொழிற்பெயராகிறது.
சான்று : பலுக்கு
குளிக்கு, குளிக்கில் போன்றவற்றையும்
நோக்குக. குளிக்கையில் என்பதற்குப் பதில்
குளிக்கு என்பது வருகிறது. குளிக்கை என்னும்
தொழிற்பெயருக்குப் பதில் குளிக்கு என்பது
வந்திருக்கக்கூடும். இருக்கையில் என்பதற்குப்
பதில் இருக்கில் என்பது வருவதை நோக்குக. இலக்கிய மொழியிலும், கிளைமொழிகளிலும் இவ்
வடிவங்கள் தொழிற் பெயரின் நிபந்தனைப் பொருளில்
வருவதைக் குறிக்கும்; தொழிற்பெயரின் இடப்பொருளை அன்று.
15.
கலித்தொகை, 144; காண்டை என
வருதல் காண்க.
|
|