|
தமிழ் மொழி வரலாறு 210
‘அதை’ என்பதை விடுத்து
‘எல்லாவற்றை’ என்னும் சொல்லை ஆள, ‘உச்ச உயர்நிலை’ (Superlative)
உணர்த்தப்படுகிறது. ‘எல்லாவற்றை’ என்பது ‘எல்லாம்’ என்பதுடன் இரண்டாம் வேற்றுமை உருபு
சேர்ந்த வடிவமாகும். ‘காட்டிலும்’ முதலானவை ஒப்புமைப் பொருள் உணர்த்தும் விகுதிகளாகின்றன.
4. 1. 2. 2. அ. ‘மை’
விகுதியுடைய பெயர்ச் சொற்கள்
தொழில் அல்லது
பண்புப் பெயரான ‘கனிவு’ என்பது ‘கனிமை’ என்றாகிறது. வெண்மை, பொறுமை போன்ற ‘மை’
விகுதியில் முடியும் வழக்கு மிகுந்த பண்புப் பெயர்களில் இருந்து ஒப்புமையாக்கமாக அவ்வடிவம்
தோன்றியிருக்கலாம்.
4. 1. 2. 2. ஆ. ‘மை’
விகுதியுடைய வினையெச்சம்
பழங்காலத்திலேயே ‘மை’ விகுதி முதலில் எதிர்மறைப் பெயரெச்சத்துடன் சேர்க்கப்பட்டது.
பின்னர் பிற பெயரெச்சங்களுடன் ‘செயலையும்’ குறிக்கும் தொழில் அல்லது பண்புப் பெயரைத்
தோற்றுவிக்கச் சேர்க்கப்பட்டது.
செய்யாமை
செய்தமை
செய்கின்றமை
இது ‘மை’
என்பதைத் தலைச் சொல்லாகக் கொண்டு (Head
Word)
பெயர்ச் சொல் வேர் அதற்கு அடையாகச் சேர்க்கப்படும் வாய்பாட்டு முறைமையாகும். ‘மை’
என்பதைப் பழைய பெயர்ச் சொல்லாகக் கருதலாம். தெலுங்கில் இது ‘மெய்’ என வருகிறது. இது
தமிழிலும் கூட ‘உடம்பு’ எனப் பொருள்படுகிறது. ‘இயல்பு’ அல்லது ‘தன்மையை’ மை விகுதி
குறிக்கிறது. எதிர்மறைப் பெயரெச்சத்துடன் ‘மை’ விகுதியைச் சேர்க்க வினையெச்சம்
தோன்றுகிறது. இது கலித்தொகையின் காலத்திலேயே காணப்படுகிறது. சான்று : கூறாமை
4. 1. 2. 2. இ. மை >
மல்
‘செய்யாமை’
என்பதற்குப் பதில் ‘செய்யாமல்’ என்ற வடிவம் பிற்காலத்தில் இடம் பெறுகிறது. -ஐ > -அல்;
‘செய்யாமை’ என்னும் பண்புப் பெயரிலிருந்து வினையெச்சத்தை வேறுபடுத்துவதற்கு இவ்விகுதி
வந்திருக்கலாம்.
|