பக்கம் எண் :

4
 

தமிழ் மொழி வரலாறு

211

4. 1. 3. எதிர்மறைத் தொடர்

4. 1. 3. அ. பழையவடிவங்கள்

பகுப்பு வடிவம் (Analytical Form) தொகுப்பு வடிவத்திற்குப்
பதில் (Synthetic Form) வருமிடங்களும் உண்டு. இந்நோக்கில் ஆராய்கையில் எதிர்மறை வினைகளின் வளர்ச்சி சுவையானதாக உள்ளது. ‘செய’ என்னும் எச்சத்துடன் அகர உருபைச் சேர்க்கப் பழைய எதிர்மறை வடிவமான ‘செயா’ என்பது கிடைக்கிறது. பெயரெச்ச விகுதியான அகரத்தை இதனுடன் சேர்த்தாலும் இதே வடிவமே கிடைக்கிறது. இதனோடு பால் விகுதிகளைச் சேர்க்கச் ‘செயான்’ முதலான வடிவங்கள் கிடைக்கின்றன. ‘ஆன்’ விகுதி பல பொருள் கொண்டுள்ள விகுதியாகும். எதிர்மறை காட்டும் இடைச் சொல்லாகிய அகரமும், பெயர்ப்பதிலி விகுதியாகிய ‘அன்’ என்பதும் சேர்ந்து ‘ஆன்’ விகுதியாகிறது. மிகுதியும் வழக்கில் உள்ள உடன்பாட்டு வினையெச்சமாகிய ‘செய்து’ பெயரெச்சமாகிய, ‘செய்த’ என்பவற்றோடு ஒப்புமையாக்கமாக எதிர்மறை வடிவங்களும் ‘செய்யாது’ ‘செய்யாத’ என்றாகின்றன. ‘வார்-அல்-அன்’ போன்ற வடிவங்கள் சங்க காலத்தில் காணப்படுகின்றன. எனவே அகரம் ‘அல்’ என்பதன் மாற்று வடிவமே என்பது தெளிவு. பல இடங்களில் ‘அல்’ என்பதிலுள்ள லகர மெய் கெடுகிறது.

4. 1. 3. ஆ. பிறிதொரு வடிவம்

‘செய்யான்’ என்னும் எதிர்மறை வினைமுற்றில் மூன்று கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

1. கர்த்தா
2. செயல்
3. எதிர்மறை

இக்கருத்துக்கள் தொக்க இவ்வடிவத்தில் எந்த ஒன்றையும் சிறப்புப்படுத்திக் கூறமுடியாது. இதல் ‘காலம்’ (Tense) சூழ்நிலையாலன்றித் தெளிவுபடாது. இக்குறைபாடு ‘செய்திலன்’ என்னும் புதிய வடிவத்தைத் தோற்றுவிப்பதால் சரி செய்யப்படுகிறது. ‘செய்து’ என்பது பழைய வினையெச்ச வடிவமாகும். ‘இலன்’ என்பது ‘இல்’ என்னும் வேரிலிருந்து வந்த ஆக்கப் பெயராகும். ‘இல்’ என்பது எதிர்மறையைக் குறிக்கும் பெயர்ச்சொல் வேராகும். ‘இல்’ ‘அல்’ என்பவற்றுக்கிடையில் ஒரு வேறுபாடு உண்டு. ‘இல்’ என்பது முழுமையான எதிர்மறையாகும். ‘அல்’ என்பது ஒரு