பக்கம் எண் :

New Page 4
 

தமிழ் மொழி வரலாறு

213

‘செய்ய + இல்லை’ என்பன இரு தனிச்சொற்களாதலின் அவை தனித்தனியே வலியுறுத்தப்படலாம். பேச்சு மொழியில் ‘செய + இல்லை’ என்ற இரு சொற்களும் ‘செய்லே’ என ஒரே சொல்லாகிறது. இங்கு ‘லே’ என்பது வெறும் எதிர்மறை இடை நிலையாகும்.

4. 2. பெயர்ச் சொற்கள்

4. 2. 1. அ. வேற்றுமைகள்

சமஸ்கிருத மொழிப் பயிற்சியின் விளைவாகச் சமஸ்கிருத மரபுத்தொடர்களும்சொற்றொகுதியும் தமிழ் வழக்காற்றைப் பாதிக்கின்றன. இப்போக்கு பதினோராம் நூற்றாண்டில் வீர சோழியத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தமிழ்வேற்றுமைகள் சமஸ்கிருத வேற்றுமைகளுடன் ஒத்தனவாக எண்ணப் பெற்றன. இதில் வேற்றுமையுருபேற்ற பெயர்ச்சொற்கள் வினையடைகளாகின்றன. இந்தியா பொதுத்தன்மை கொண்ட மொழிகளின் வழங்கிடமாக (Linguistic Area) மாறியது. இதன் விளைவை இந்திய மொழிகளின் வேற்றுமை அமைப்புக்களில் காணலாம். இரண்டாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை முதலிய பொதுவான அடிப்படைகள் இம்மொழிகளில் உண்டு. அடைத் தொடர்கள் வேற்றுமைகளாக வளர்ச்சியுற்றமை, சமஸ்கிருதச் செல்வாக்கால் வலுப்பெற்றிருக்கலாம். நான்காம் வேற்றுமை உண்மையான ‘கொடைப் பொருள்’ வேற்றுமையாகிறது; ஐந்தாம் வேற்றுமை உண்மையான ‘நீங்கற் பொருள்’ வேற்றுமையாகிறது. ஆனால் வேறு சில மாற்றங்களுக்கான தொடக்கத்தை இம் மூலாதாரங்களைக் கொண்டு விளக்க முடியாது. கருவிப் பொருள் வேற்றுமையும் உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமையும் தெளிவாக வேறுபடுத்தப்படலாயின. கருவிப் பொருள் வேற்றுமைக்கு ‘ஆல்’ என்பதும், உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமைக்கு ‘ஒடு’ என்பதும் வேற்றுமை உருபுகளாயின. கருவிப்பொருள் வேற்றுமை நீங்கற் பொருள் வேற்றுமையுடன் ஒன்றாகும் போக்கும் உள்ளது.

சான்று : ‘புகையுடைமையின்’

  அல்லது

  ‘புகையுடைமையால்’

இடப்பொருள் வேற்றுமையும் நீங்கற் பொருள் வேற்றுமையும் ஒன்றாகும் போக்குள்ளது. நீங்கற் பொருள் வேற்றுமை