பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

215

சான்று : வாள்கொண்டு

‘பொருட்டு’, ‘ஆக’ ஆகிய சொற்கள் நான்காம் வேற்றுமையை உணர்த்துகின்றன. ‘ஆக’ என்னும் சொல்லுருபு பழைய குகர விகுதியுடன் வருகிறது.

சான்று : ‘அவன் பொருட்டு’

‘அவனுக்காக’

ஐந்தாம் வேற்றுமை ‘இருந்து’, ‘நின்று’ முதலிய சொல்லுருபுகளைப் பெறுகிறது.

சான்று : ‘வீட்டில் இருந்து’

‘வீட்டில் நின்று’

ஆறாம் வேற்றுமை ‘உடைய’ என்பதைப் பெறுகிறது.

சான்று : ‘அவனுடைய’

பொதுவாக இடப்பொருளை உணர்த்தும் எச்சொல்லையும் ஏழாம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தும் மரபு முன்னரே தோன்றிவிட்டது. ஓகாரம் அல்லது ஏகாரத்தைப் பெயர்ச்சொல்லுக்கு முன்னுருபாக (Pre-position) விளி வேற்றுமை பெறுகிறது. சங்கப்பாடல்களில் பிந்தியவற்றில் இவ் இயல்புகள் காணப்படுகின்றன. இச் சொல்லுருபுகள் பிற்காலத்தில்தான் தனி வேற்றுமை உருபுகளாக வளர்ச்சியுற்றன.

4. 2. 2. பெயர்ப்பதிலிகள்

சுட்டுப் பெயரடி உகரம் மெல்ல மறைகிறது. ‘இவ’ என்பது போன்ற வடிவங்களும் மறைகின்றன. ‘இதா’ (பின்னர் இவ்வடிவம் ‘இந்தா’ என்றாயிற்று) என்பது போன்ற வடிவங்களின் வழக்கு மிகுகின்றது.

4. 2. 2. 2. தனிநிலையாக இருக்கும் பெயர்ப்பதிலி (Primary Pronoun)

அ. தன்மை

தொல்காப்பியர் ‘நான்’ என்பதைக் குறிக்கவில்லை. ‘நாம்’ என்பது முன்னிலையை உளப்படுத்தும் தன்மைப் பன்மையாயின், அதற்கு இணையான ஒருமை வடிவம் ஒன்று இருக்க முடியாது. ஆனால் ‘யாம்’, ‘யான்’ என்பவற்றுக்கு இணையாக, ஒப்புமையாக்கமாக நாம் என்பதற்கு ‘நான்’ என்ற ஒருமை வடிவம் தோன்றியது. கன்னடத்தில் கூட ‘நான்’ என்பது பின்னாளில் புகுந்ததேயாகும். ஆனால் இவ்வடிவம் நடுத்திராவிட மொழிகள்