பக்கம் எண் :

New Page 6
 

தமிழ் மொழி வரலாறு

217

‘இராமன் ஆனவன்’
‘சீதை ஆனவள்’

தென் மாவட்டக் கிளைமொழிகளில் பழைய இடப்பொருள் வேற்றுமையை வலுப்படுத்த ‘வைத்து’ என்பது வருகிறது.

“ஊரில் வைத்து-ப்-பார்த்தேன்”

4. 2. 2. 2. விகுதிகள்

சமஸ்கிருத மொழியோடு ஒப்புமையாக்கமாகப் பல புதிய விகுதிகள் வருகின்றன. மேலும் அரிய பழைய வடிவங்களும் தொடர்ந்து போற்றப்பெற்று வழக்கில் வருகின்றன.

சாலி - புத்திசாலி
காரன் - வேலைக்காரன்
அரவு - தோற்றரவு (அரவு : தொழிற்பெயர் விகுதியான இது முன்னரே ஆட்சியில் உள்ளது).

4. 3. தொடரியல்

4. 3. 1. பெயரெச்சம்

வினையெச்சங்களைப் போலப் பெயரெச்சங்கள் அடுக்கி வாரா. இறுதியாக உள்ள பெயரெச்சம் தவிர ஏனையன வினையெச்சங்களாக மாற்றப்படும். ஆனால் திருவாசகத்தில் பெயரெச்சங்கள் குறிப்பாக எதிர்மறைப் பெயரெச்சங்கள் அடுக்கி
வருவது காணப்படுகிறது.19 எதிர்மறைப் பெயரெச்சமும் ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் எதிர்மறையும் ஒத்த வடிவம் கொண்டிருக்கின்றன. பழைய விதியின்படி அடுக்கின் இறுதியில் உள்ளதைத் தவிர ஏனையன ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொள்ளப்படும். இது எப்படியாயினும் இக்காலத்தில் உடன்பாட்டுப் பெயரெச்சங்களும் அடுக்கி வருகின்றன. ஆறாம் வேற்றுமை உருபை ஏற்ற வடிவம் அடையாகவும் வருகிறது. தனித்து வழங்காத வடிவங்களை உடைய அடைகளைத் தவிர வேறு சொற்கள் அதற்குப் பின்னர் வாரா.இதன் விளைவாகப் பல சொல் தொகைகள் (Multiple Compounds) தோன்றுகின்றன.ஆனால் மாக புராண அம்மானையில் ஆறாம் வேற்றுமை உருபு ஏற்ற வடிவத்திற்குப் பின்னர் தனித்து வழங்கும் அடை வருகிறது; “மடிந்த”; ‘அந்த’ என்ற அடைசொல்
 


19. திருவாசகம், 488