தமிழ் மொழி வரலாறு 218
‘பிள்ளையின்’ என்ற
சொல்லின் பின் வருதல் காண்க.20
வினையாலணையும் பெயர்கள் காலங்காட்டாமல்
முழுப் பெயர்ச் சொல்லாகின்றன.
சான்று : ‘கேட்டது’
(‘வதந்தி’ என்பது இதன் புதிய பொருள்)
4. 3. 2. உரையாடல் நடை
மாகபுராண அம்மானையின்
மொழி பேச்சு மொழி போன்றுள்ளது. இடைநிறுத்தங்கள், உடைந்த வாக்கியங்கள், சில இடங்களில்
எழுவாயும் பயனிலையும் இயைந்து வாராமை, பலவிடங்களில் காலங்காட்டுதலில் தொடர்ச்சியின்மை
ஆகிய போக்குகள் காணப்படுகின்றன. வினைமுற்று அடுத்த வாக்கியத்தில் எச்சமாக மீண்டும்
வருவது சாதாரணப் பேச்சு வழக்கை நினைவுபடுத்துகிறது. ‘செய்து’ என்னும் வினையெச்சம் ஓர் வினையைக்
கொண்டு முடிதல் வேண்டும். இவ்வினைமுற்றின் எழுவாய் செய்து எனும் வினையெச்சத்தின் எழுவாயாகவும்
இருக்க வேண்டும். ஆனால், இக்காலத்தில் இவ்விதி பலவிடங்களில் பின்பற்றப்படவில்லை.
4. 3. 2. பிற வடிவங்கள்
வீரமாமுனிவர்
தமது பேச்சுத் தமிழ் இலக்கணத்தில் அவர் காலத்திய மரபுத்தொடர்கள் சிலவற்றைத்
தருகிறார். மாக புராண அம்மானைக்கான எனது முன்னுரையிலும் ஒரு பட்டியல் தந்துள்ளேன். திருக்குற்றாலக்
குறவஞ்சியில் காணப்படும் கிளைமொழிச் சொற்களும் தொகுக்கப்பட்டுள்ளன.21
20.
மாகபுராண அம்மானை,
p.
XXVI.
21.
A. Ramaswami :
Tirikutaracappa-k-kavirayar.(Thesis
awarded M. Litt. by the Annamalai
University)
இந்நூல் இன்னும் அச்சாகவில்லை.
|
|