பக்கம் எண் :

9
 

தமிழ் மொழி வரலாறு

219

9.தமிழ் மொழியின் புற வரலாறு

அ. தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்றவை

முன்னுரை

தமிழ் மொழியிலிருந்து, கலாச்சாரக் கலப்பு காரணமாகப் பிற மொழிகளுக்குச் சென்றுள்ள சொற்களை, அவற்றை வெளிநாட்டவர் எவ்வாறு ஒலிக்கக் கேட்டனர் என்னும் மொழியியல் கண்ணோட்டத்தில் ஆராய்வது சுவை பயக்கும்.

முண்டா மொழிக் குடும்பம்

முண்டா மொழிகளே திராவிட மொழிகளின் மிகப் பழைய அண்டை மொழிகளாகும். இம் மொழிகள் இக்கண்ணோட்டத்தில் இன்னும் ஆராயவில்லை. தமிழிலிருந்து வந்தவை என ஐயுறுத்தக்க சில சொற்கள் இவற்றில் உண்டு. ‘மயூர’ என்ற சமஸ்கிருதச் சொல் ‘மரக்’ என்ற முண்டா மொழிச் சொல்லிலிருந்து வந்தது என்பர். ஆனால் இச் சொல் பல திராவிடச் சொற்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது எனக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய-ஆசிய வடிவத்தில் கூட ‘ரக்’ என்பது விகுதியாக உள்ளது; எனவே ‘ம’ என்பது இங்கு வேர் ஆகிறது. திராவிட மொழிகளில் ‘மயில்’ அல்லது ‘மஞ்ஞை’ என்பதன் வேர் ‘மா’ அல்லது ‘மை’ என்பதாகும். இதன் பொருள் ‘கருப்பு’ அல்லது ‘நீலம்’ என்பதாகும். மயில் அல்லது மஞ்ஞை என்னும் சொற்கள் திராவிட மொழிகளிலிருந்து முண்டா மொழிக்குப் போயிருக்கலாம். ‘முரள’ என்ற முண்டா மொழிச் சொல்லிலிருந்து ‘கேரள’ என்ற சொல் திராவிட மொழிகளுக்கு வந்ததாகக் கூறுவர். ‘மு’ என்னும் முன்னொட்டுக்குப் பதில் ‘கே’ என்னும் முன்னொட்டு வந்தது என்பர். ‘கேரள’ திராவிட மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டதாயிருக்கக் கூடும். ‘கேரள’ என்னும் சொல்லில் உள்ள ‘கே’ என்பதற்குப் பதில்