பக்கம் எண் :

New Page 8
 

தமிழ் மொழி வரலாறு

220

‘ம’ அல்லது ‘மு’ என்ற முண்டா மொழி முன் ஒட்டு சேர்ந்திருக்க வேண்டும்.

வடமொழி

i. வடமொழியில் உள்ள திராவிடச் சொற்கள்

வடமொழிச் சொற்கள் பலவற்றை நேரடியாகத் தமிழ் வேர்களிலிருந்து வந்தன எனக் காட்ட முடியாவிட்டாலும், திராவிட வேர்களிலிருந்து வந்தன எனக் காட்டலாம் எனப் பர்ரோ சுட்டிக்காட்டியுள்ளார். திராவிட மொழிகளுக்கும் ஆரிய மொழிகளுக்கும் இடையேயான உறவு பற்றிய பிரச்சினையானது சமீப காலத்தில் சிக்கல் மிகுந்ததாகிவிட்டது. இவ் உறவு எப்பொழுது தொடங்கியது என்பதே இப்போதைய வினாவாகும்.

மகஞ்சேதாரோ

சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்கள் திராவிடமொழிக் குடும்பத்தின் பழைய கிளைமொழி ஒன்றினைக் குறிக்கின்றன என ஹிராஸ் பாதிரியார் போன்றோர் கருதுகின்றனர். ஆனால் சிந்து சமவெளி எழுத்துக்கள் பற்றிய அவரது விளக்கம், ஒரே குறியீட்டிற்குத் தன்னிச்சையான மாறுபட்ட ஒலி மதிப்பையும் பொருளையும் தரும் போக்கை அடிப்படையாகக் கொண்டது. எனவே அவரது முடிவுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவல்ல. திராவிட மொழிகளைப் பற்றிய சான்றுகள் எதையும் வேத காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து தர இயலவில்லை.

ii. திராவிட மொழி பற்றிய புதிர்

தென்னகத்தில் கி. மு. 700க்கும் கி.மு 400க்கும் இடைப்பட்ட காலத்தில் கற்களால் கட்டப்பட்ட துளையுடைய கல்லறைகளையும் இரும்பையும் பயன்படுத்திய பெருங்கற்கால நாகரிகத்தினர் வாழ்ந்தனர் என்னும் உண்மையைப் பிரம்மகிரி அகழ்வாராய்ச்சியைக் கொண்டு வான் பூர்ஹைமென்டௌ (Von Furer Haimendohf) என்பவர் விளக்கியுள்ளார்.1 ஓரளவு வெளிநாட்டுச் செல்வாக்குக் கிட்டியிருப்பினும் கூட, அந்நாகரிகம் உள்நாட்டிலேயே தோன்றி வளர்ந்திருக்க முடியாது எனக்கருதுகிறார். அவர்கள் யாரை வெற்றி கொண்டார்களோ அப்பழங்குடியினரின் மொழியைப் பேசியிருக்க முடியாது என அவர் உறுதியாகக்


1. Christoph Von Furer Haimendohf :
     Tamil Culture Vol. 2, pp 127 - 136, 1953.