தமிழ் மொழி வரலாறு 221
கூறுகிறார். இவ்
அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட வீலர் (Wheeler) என்பார் இம்முடிவுக்கு வரவில்லை. கற்களால் கட்டப்பட்ட துளையுடைய கல்லறைகள்
இப்பெருங்கற்கால நாகரிகத்தினரின் தனிச் சிறப்பியல்பு என அவர் குறிப்பிடுகிறார்.
இத்தகைய கல்லறைகள் ஹைதராபாத்திற்கு அருகிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அவர்
கூறுகிறார். கி. மு. 1500க்கும் பழமையானது எனக் கருதப்படும் இத்தகைய கல்லறைகள்
மேற்கத்திய நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கல்லறைகள் கராச்சிக்கு
அருகிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுவதாகவும் இவர்
குறிப்பிடுகிறார். இந்தப் பெருங்கற்கால நாகரிகம் மேற்கில் இருந்து வந்திருக்கலாம்
என்பதில் உண்மையிருக்கலாம் எனப் பொதுவாக அவர் கூறுகிறார்; என்றாலும் கூடவே
இவற்றுக்கிடையேயான பெருத்த கால, இட வேறுபாடுகளையும் வலியுறுத்திக் கூறுகிறார்.
மொழிப் புதிர்
இந்தியாவின்
பெருங்கற்கால நாகரிகத்திற்கும் மேற்கு ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றின் பெருங்கற்கால
நாகரிகங்களுக்கும் இடையே ஒருமைப்பாட்டிணைப்பு இருந்திருக்குமோ என்பதை இப்போதைக்கு ஆராயாது
ஒதுக்கி வைப்பினுங்கூட, ஹைமெண்டார்ப் கூறிய மொழி பற்றிய முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ள
முடியாது. வென்றவர்கள் தோற்றவர்களுடன் மொழியில் உறவு கொள்ள முடியாது அல்லது அவர்களின்
சொற்களைக் கடன் பெற முடியாது என்பதுவே மொழிபற்றிய அவரது முடிவாகும். இலத்தீன், கெல்டிக்
(Celtic), ஜெர்மன் ஆகிய மொழி பேசுவோரிடையே உள்ள உறவைச் சுட்டிக்காட்டினால் மட்டும் இங்குப்
போதுமானது. எனவே திராவிட மொழிகள் ஒரு பொழுதும் வட இந்தியாவில் பரவலாகப்
பேசப்பட்டிருக்க முடியாது என்ற அவருடைய வாதமும் அடிபட்டுப் போகின்றது.
iii கடன் வாங்கல்கள்
வேத காலத்தில் கடன்
வாங்கப்பட்ட சொற்கள்
‘mayura’
(மயூர), ‘khala’,
‘phala’ முதலிய வடசொற்கள் திராவிடச் சொற்களோடு தொடர்புடையன என பர்ரோ கூறுகிறார்.
‘மயில், களம், பழம்’, என்னும் வடிவங்கள் இன்று கூடத் தமிழில் உள்ளன.2
‘bala’
(பலம்) என்பது ‘வல்’ என்னும் திராவிட வேரி
2.
T. Burrow :
BSOAS, II,
603-610, 1945.
|
|