|
தமிழ் மொழி வரலாறு 222
லிருந்து வந்ததென எமனோ சுட்டிக்
காட்டுகிறார். மூலத்திராவிட மொழியின் காலத்திலேயே வகர மெய் ஒலிப்புடைப் பகர மெய்யாக
(b)
மாறிவிட்ட திராவிடக் கிளைமொழியொன்றிலிருந்து இச்சொல் கடன் வாங்கப்பட்டிருத்தல்
வேண்டும்.3
இந்தோ-ஐரோப்பிய மொழியில் ஒலிப்புடைப் பகர மெய்யொலியன் அரிதாகவே வருகிறது. இதை
இந்தோ ஐரோப்பிய மொழி ஒலியனாக ஒப்புக் கொள்ளாதவர்கள், இது திராவிடத்திலிருந்து
வந்தது என்ற கொள்கையை ஒப்புக் கொள்வர். ‘bala’ என்பதற்கான இந்தோ-ஐரோப்பிய ‘இனச் சொற்களின்’ (Cognates) பொருள்கள் ஒத்தவையாக இல்லையெனின், இங்ஙனம் ஒப்புக் கொள்வதில் தடையேதும் இல்லை.
இதிலிருந்து ரிக் வேத காலத்தவர்களோடு சேர்ந்து திராவிட மொழி பேசுவோர் வாழ்ந்தனர்
என்பது புலனாகிறது. தொலைவிலுள்ள பஞ்சாபில் கூட இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
பலூச்சிஸ்தானத்தில் திராவிட மொழியான பிராகூய் மொழி இருப்பது இத்தகைய கொள்கைக்கு
ஆக்கம் தருகிறது:
iv இந்திய சூழலுக்கேற்ற சொற்கள்
எமனோ குறிப்பிடுவது போல,
இந்தியாவிற்கு வந்த இந்தோ - ஐரோப்பியர்கள் காலம் செல்லச் செல்ல இங்குள்ள செடி,
கொடிகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
சான்று : 1. தமிழில் உள்ள ‘கைதை’
என்பது வடமொழியில் ‘கைதகா’ (kaitaka)
என வருகிறது.
2. தமிழ் ‘ஏலம்’ வடமொழியில் ‘ஏலா’ (ela)
என வருகிறது.
3. தமிழ்ப் ‘பல்லி’ வடமொழியில்
‘பல்லீ’ (palli) என வருகிறது.
4. தமிழ் ‘மயில்’ வடமொழியில் ‘மயூர’ (mayura)
என வருகிறது.
5. தமிழ் ‘(எறும்புப்) புற்று’
வடமொழியில் ‘புத்திக’ (Puttika) என வருகிறது.4
எனவே வேதகாலத்தும் அதற்குப்
பிற்பட்ட காலத்தும் வடமொழியில் திராவிடச் சொற்கள் காணப்படும் வாய்ப்பைத் தள்ளி
விட முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
|
3.
M. B. Emeneau :
“Linguistic prehistory of India”,
Tamil Culture, Vol V.No 1, pp 50, 51.
4.
M. B. Emeneau :
“Linguistic prehistory of India”,
Tamil Culture, Vol V.No 1, pp 50, 51.
|
|