பக்கம் எண் :

ஆண
 

தமிழ் மொழி வரலாறு

224

கி. பி. 100 ஆம்ஆண்டிற்கு முன்னர் வாழ்ந்த ‘பான் - கௌ’ (pan-kou) என்பார் பேரரசர் வௌவின்(Wou) காலத்திலிருந்து ‘ஹ்வாங்-த்சே’ (Houang-tche) அரசு சீனாவுக்குத் திறை செலுத்தியது எனக் கூறுகிறார். வணிகர்கள் வழங்கிய பரிசுப் பொருள் திறை எனக் கருதப்பட்டது. ‘ஹ்வாங்-த்சே’ என்பது ‘காஞ்சி’ என்பதோடு ஒலிச்சமன்பாடு உடையது என பெர்ராண்டு (Ferrand) என்பார் கூறுகிறார். பான் கௌவின் ஆட்சிக் காலத்தைப் பொறுத்த வரையில் இச்சமன்பாட்டை ஏற்பதற்கு வரலாற்று உண்மைகள் எதுவும் தடையாயில்லை. அக்காலத்தில் சீனர்கள் கடற்போக்குவரத்துக்கு அந்நியக் கப்பல்களையே சார்ந்திருந்தனர்.கி. மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள், விந்தைப் பொருட்கள் முதலியன தென்னகத்திலிருந்து சீனாவிற்குக் கடல் வழியே சென்றன. எனவே houang-tche என்ற வடிவில் காஞ்சி என்ற ஒரு சொல்லாவது தமிழிலிருந்து சீன மொழிக்குச் சென்றது என முடிவு கட்டலாம்.5

தமிழிலிருந்து வந்ததாக ஒரு சப்பானியச் சொல்லைக் கூடக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் சீனாவிலும் சப்பானிலும் ஜென் புத்தமதம் காஞ்சியிலிருந்து கடல் வழியே சென்ற புத்தவர்மன் என்ற இளவரசனால் தோற்றுவிக்கப்பட்டது. சப்பானின் கடனா (Katana) நெடுங்கணக்கு வடிவத்தில் தமிழின் செல்வாக்கு இருப்பதாக ஐயுறுகிறார்கள்.6

சிங்களம்

முன்னரே நாம் கண்டது போல, இலங்கையுடனான தமிழகத்தின் தொடர்பு மிக்கப் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். இக்காலச் சிங்கள மொழியில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. சிங்கள யாப்பின் கூடத் தமிழிலிருந்து வந்ததாகவே கருதப்படுகிறது. ‘தமிழன்’ என்ற சொல் சிங்களத்தில் ‘damila’ என வழங்கப்படுகிறது. தமிழில் மொழி முதல் ஒலிப்புடை வெடிப்பொலி வருவது சில இடர்ப்பாடுகளைத் தருகிறது. கி. மு. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இலங்கைக் கல்வெட்டுக்களில் ‘பெருமகன்’ முதலான தமிழ்ச் சொற்கள் வருகின்றன.



5. Nilakanta Sastri :

Foreign Notices of South India.

6. Nilakanta Sastri :

Foreign Notices of South India.