|
தமிழ் மொழி வரலாறு 225
உயிரிடை வெடிப்பொலி
இவ்விடங்களில் ஒலிப்பில்லாததாக எழுதப்படுகிறது. பண்டைய சிங்களத்தில் தமிழ்ச்
சொற்களை ஆராய்ந்து அறிவது நல்ல பயனைத் தருவதாகும்.
கீழைக் கடற் பகுதிகள்
கீழைக்
கடற்பகுதிகளுடனான தொடர்பும் மிகப் பழமையானது. சம்பாவில்(Campa)
பரவியிருந்த வரிவடிவம் தென்னிந்திய வகையிலிருந்து தோற்றம் பெற்றதாகும். தாய்லாந்தில்
கொண்டாடப்படும் ‘தேசிய ஊஞ்சல் திருவிழா’ (National
Swing Festival) ‘traim bave
tripave’ எனப் பெயர் பெறுகிறது.
மாணிக்கவாசகராலும் ஆண்டாளாலும் முறையே பாடப்பெற்ற நூல்களான ‘திருவெம்பாவை’ ‘திருப்பாவை’
என்பன அவை. இன்றுகூட இவை டிசம்பர், சனவரி மாதங்களில் பாடப்படுகின்றன. இம்மாதங்களில்
தான் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. சமயக் குருமார்கள் பயன்படுத்தும் ஓலைச் சுவடிகளில்
காணப்படும் இப்பாடல்களை ‘வரிவடிவஇயல்’ (On
Paleographic grounds) அடிப்படையில் பார்க்கையில், அவை பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரிய
வருகின்றன.
மேற்கு
பண்டைக்காலம்
பாபிலோனியா
இந்தியர்கள்
பாபிலோனியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய வணிகர்கள்
முதலில் காகத்தை அங்குக் கொண்டு சென்றனர் என்றும் அது அவர்களைப் பெரிதும் கவர்ந்தது
என்றும், ஆகையால் அவ்வணிகர்கள் பின்னர் மயிலை விற்பனைக்குக் கொண்டு சென்றனர் என்றும்
புத்த சாதகக் கதைகள் கூறுகின்றன. தமிழகத்தின் மேற்குக் கரையில் கிடைக்கும் தேக்கு
பிரமிடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தேக்குமரம் தமிழ் நாட்டிலிருந்து
எடுத்துச் செல்லப்பட்டதா, அத்துடன் தமிழ்ச் சொற்களும் சென்றனவா என்பதையெல்லாம்
பற்றித் திட்டவட்டமாக எதுவும் கூறமுடியாது. சால்தியாவிலிருந்து (Chaldea)
இராசி மண்டலக் குறியீடுகள், கிழமைகளின் பெயர்கள் ஆகியவை நேரடியாகத் தமிழுக்கு வந்தன
எனச் சிலர் கொள்கின்றனர். சுமேரியத் தலைநகரான ‘ஊர்’ என்பதை ‘ஊர்’ என்னும் தமிழ்ச்
சொல்லோடு இணைத்துப் பேசுவர். மயிலுக்கு ஹீப்ரு மொழியில் வழங்கும் ‘துகி’ என்பதைத்
‘தோகை’
|