பக்கம் எண் :

தற
 

தமிழ் மொழி வரலாறு

227

தற்காலம்

பல தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் புகுந்துள்ளன; அங்கிருந்து பிற மேற்கத்திய மொழிகளுக்கும் சில சொற்கள் சென்றுள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சென்னையைத் தமது நடவடிக்கைகளின் மையமாகக் கொண்டிருந்தனர். பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் அவர்களது நடவடிக்கைகளின் நிலைக்களமாக வட இந்தியா ஆனது. பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பொறுத்தவரையிலும் கூட இது உண்மை ஆகும். ஆங்கிலேயர் தங்கள் மொழிச் சொற்களைக் கொண்டே குறிக்க முடியாத அளவிற்குத் தமிழில் பொருட்கள் இல்லை. எனவே ஆங்கிலத்தில் தமிழ்ச் சொற்களைக் கடன்வாங்குதல் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

17 ஆம் நூற்றாண்டில் இந்திய நாணயங்கள், அளவைகள், மரக்கட்டைகள், ஆங்கிலேயக் கம்பெனியில் பணிபுரியும் இந்தியர்களின் சாதிப்பெயர்கள், இந்தியப் போக்குவரவுச் சாதனங்கள், புதிய உணவுப் பொருட்கள், இன்பநுகர்ச்சிக்குப் புது வழிகள், விந்தையான (ஐரோப்பாவில் காணப்படாத) உயிரினங்கள் போன்றவற்றை ஆங்கிலேயர் இந்தியாவில் கண்டனர். இவற்றுக்கு ஆங்கிலத்தில் சொற்கள் கிடையா;7 எனவே தமிழிலிருந்து அவற்றை அவர்கள் கடன் வாங்க வேண்டியிருந்தது.

முதன் முதலில் காணப்படுபவை என்னும் வரன் முறையில் தயாரிக்கப்பட்ட நூற்றாண்டு வாரியான ஆங்கிலச் சொற்களின் பட்டியலில் பின்வரும் தனி இயல்புகள் காணப்படுகின்றன.

1. மேலை நாட்டு மொழிகளில் நாவளை டகர மெய் கிடையாது. இவ்வொலியானது உச்சரிப்பின் போது வீரமாமுனிவர் விளக்கியுள்ளபடி, ரகர மெய்க்கு அருகில் வருவதால் அப்படியே எழுதப்படுகிறது.

Tuttukkuti (தூத்துக்குடி) > Tuticorin
Tarankampati (தரங்கம்பாடி) > Tranquebar

வி்ரைந்து உச்சரிக்கப்படும்பொழுது டகர மெய் லகர மெய்யாகவே கேட்கப்பட்டது.

mancati (மஞ்சாடி) > mangelin



7. G. Subbarao :

Indian Words in English, p 2.