|
தமிழ் மொழி வரலாறு 229
குறில் திறப்பசையால் தொடரப்படும் பொழுது குறில் அசையின் ஈற்றில்
உள்ள குறில் - இகரம்
ஒரு மூக்கொலியுடன் சேர்த்துக் குறிக்கப்பட்டது.
-CVCi
> - CVCin
‘in’
என்பதிலுள்ள ஆங்கில இகர உயிர் போன்றதே இம் மொழியிறுதி இகரமுமாகலாம்.
mancati
(மஞ்சாடி) > mangelin
மொழியிறுதி
இகரம் ‘எஎ’ (ee)
எனவும் குறிக்கப்படுவது உண்டு.
Kanci
(காஞ்சி)
> Conjee
‘y, ee, ey’ என்பவற்றில் இகரத்தின் மூன்று நெடுமைகளும் முறையே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கலாம். உகரம்
‘oo’ எனக் குறிக்கப்படுகிறது.
punku
(புன்கு)
~
Punkan
(புங்கன்) > Poon
Curuttu
> Cheroot
அகரம் ‘o’
எனக் குறிக்கப்படுகிறது.
Kanakka
- > Conico -
மெய்
இரட்டைகளால் தொடரப்படுமாயின் அகரம் ‘u’ எனக் குறிக்கலாம்.
nalla
(நல்ல) > nullah
அகரம் ‘aw’ எனக் குறிக்கப்படுகிறது.}
Kani
(காணி) > Cawney
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் தமிழ் ஆகாரம் ‘au’
எனக் குறிக்கப்படுகிறது.
Cintatirippettai
(சிந்தாதிரிப்பேட்டை) >
Cintaudripet
‘market’
என்பதன் ஒப்புமையாக்கமாக ‘ஆ’ என்பது ‘e’
எனவும் குறிக்கப்படுகிறது.
mancati
> mangelin
இங்கு வரும் ‘e’
யானது, ‘g’
ஐ மென்மையுடையதாகக் காட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அகரம் ‘e’
எனவும் குறிக்கப்படுகிறது.
marakkal
(மரக்கால்) > mercal
|