பக்கம் எண் :

பத
 

தமிழ் மொழி வரலாறு

230

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அகரம் ‘a’ எனக் குறிக்கப்படுகிறது.

pantal (பந்தல்) > pandal
pantaram (பண்டாரம்) > pandara

இந்நூற்றாண்டில் ‘ஐ’ என்பது ‘ai’ எனக் குறிக்கப்பெற்று, ‘ay’ என எழுதப்படுகிறது.

Palai (பாலை) palay

ஆனால் இஃது இலக்கிய வழக்கைப் பின்பற்றியதாகும்; ஏனெனில் ‘ஐ என்னும் தமிழ்ப் பேச்சு வழக்கில் ‘எ’ அல்லது ‘அ’ என மாறிவிட்டது. ஆங்கிலத்தில் ‘எ’ மொழியிறுதியில் வராது என்பதால் அது ‘இ’ (i) என ஆனது முன்னரே விளக்கப்பட்டது.

tope > toppu (தோப்பு)
tyre > tayir (தயிர்)

ஆங்கிலத்தில் மொழியிறுதியில் ஒலியற்ற ‘e’ வருவதானது அதற்கு முன்னர் வரும் ‘o’, ‘y’ என்பன முறையே ‘o’, ‘ai’ என உச்சரிக்கப்படுவதை உணர்த்துவதற்கேயாகும்.

வீ்ரமாமுனிவர் சுட்டுவது போல மேலைநாட்டு மொழிகளில் ஒலி நீட்சியானது
(length) ஒலியனாக இல்லாமையால், அம்மொழிகளைப் பேசுவோர் பிற மொழிகளில் உள்ள ஒலி நீட்சியை (இரட்டித்தலை)ப் பல சமயங்களில் கவனிக்கத் தவறுகின்றனர்.

marakkal (மரக்கால்) mercal

மெய்களைப் பொறுத்த வரையில் நீட்சி இன்மை என்பது தமிழ் உச்சரிப்பின் நடப்பியல் உண்மையைக் காட்டுவதாகும். குறில் வெடிப்பொலிகள் மொழியிடையில் ஒலிப்புடையன ஆகின்றன. ஆனால் நெடில் வெடிப்பொலிகள் ஒலிப்பில்லாதுள்ளன. குறிலுயிர்களுக்குப் பின்னர் தவிர ஏனைய இடங்களில் இரட்டை வெடிப்பொலிகள் ஒலிப்பிலாத் தனி வெடிப்பொலிகளாகவே உச்சரிக்கப்படுகின்றன. ஒலிப்புடைமை ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது; ஆனால் குற்றுயிர்களுக்குப் பின்னர் வரும் நீட்சி குறிக்கப்படுவது இல்லை.

tirucci (திருச்சி) > trichi
kopparai (கொப்பரை) > copra

Kanakku (கணக்கு) > Conico