பக்கம் எண் :

பட
 

தமிழ் மொழி வரலாறு

232

பட்டிருக்கலாம்; அல்லது அவ்வுகர உச்சரிப்பு கேட்கப்படாதிருந்திருக்கலாம்.

Kacu (காசு) cash
Curuttu (சுருட்டு) Cheroot
Urru (ஊற்று) woots

3. தமிழ் மொழியை ஆங்கில வரிவடிவில் பெயர்த்து எழுதும் பொழுது வரும் மாற்றங்கள் எல்லாம் தமிழில் நிகழ்ந்துள்ள மாற்றங்களின் விளைவாகவே இருக்கக்கூடும்.

அ. மூக்கொலிகட்குப் பிறகு வரும் வெடிப்பொலிகள் ஒலிப்புடையன ஆகின்றன.

Mancati (மஞ்சாடி) > mangelin
Pantaram (பண்டாரம்) > pandara

Pantal (பந்தல்) pandal

ஆ. மூக்கொலிக்குப் பின்னர் வரும் வெடிப்பொலி மூக்கொலியாகிறது. குற்றியலுகரம் உணரப்படாத பொழுது பின் கண்ட வடிவங்கள் வரும்.

punku (புன்கு) ணு pungu (புங்கு) > poonu

இ. மொழியிறுதிக் குற்றியலுகரம் ‘l’ என நடுவிடத்ததாக ஆக்கப்பட்ட ஒலி (centralized sound) - கேட்கப்பட்டு ‘ing’ என எழுதப்படுகிறது. இறுதியில் உள்ள மூக்கொலியையும் நோக்குக.

Cunnampu (சுண்ணாம்பு) ணு Cunnamu > Chunaming

ஈ. வகர மெய் இதழ்ப் பல்லொலியாக ‘b’ என்பதுடன், கட்டற்ற அல்லது நிபந்தனையற்ற மாற்றத்தில் வருகிறது.

Verrilai (வெற்றிலை) > betel

உ. மெய்யொலிகட்கு இடையில் வரும் உயிர்கள் பேச்சுறுப்புக்களில் ஒட்டு நீங்கும் வகையில் பிறக்கும் உயிர்களாக மாறுகின்றன; மயக்கங்கள் (Clusters) தோன்றுகின்றன.

Tirucci (திருச்சி) Trichi
Kopparai (கொப்பரை) Copra

ஊ. இம்மயக்கங்களும் பின்னர் ‘சுரபத்தியால்’ தவிர்க்கப்படுகின்றன.

Kanakka > Kan’kka > *Kannika > Conico