பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

24

களைப் பேசுவோர் சோட்டாநாகபுரி பீடபூமியில் உள்ளனர். மால்டோ ராஜ்மகாலில் பேசப்படுகிறது. இப்பகுதிக்கு அருகில் முண்டா மொழிகள் பேசப்படுகின்றன. மேற்குப் பாகிஸ்தானின் மலைப்பகுதிகளில் பிராகூய் மொழி பேசப்படுகிறது.

3. 1 திராவிட மொழிகளின் அமைப்பு ஒலியனியல்11

ஒப்பியல் முறையில் சொல்வடிவங்களை ஒப்பிட்டு, ‘இனச் சொற்களில்’ ( Cognate words) காணப்படும் ஒலிகளுக்கு இடையிலுள்ள உறவுகளுக்கான விதிகளை நிறுவ இவ்வியல் முயல்கிறது. “குடும்ப மொழிகள் பெரும்பாலானவற்றில் காணப்படுதல்” என்ற அடிப்படையில் மூலத்திராவிட மொழி வடிவங்கள் தீர்மானிக்கப் படுகின்றன. அருகி வழங்கும் வடிவங்கள் சில சமயங்களில், மூலத் திராவிட மொழி வடிவங்களாக இருத்தலும் உண்டு. மூலத் திராவிட மொழியின் ஒலியன் அமைப்புப்பற்றி, எமனோ ‘மீட்டுருவாக்கத்தால்’( Reconstruction) அமைத்துத் தந்துள்ள முறை பின் வருமாறு.12

திராவிட மொழிகளின் உயிர் நீட்சி ( Vowel length) ஒலியன் தன்மையதாகும். திராவிட மொழிகளில் முன் உயிர்கள் இரண்டும் பின் உயிர்கள் இரண்டும் உள்ளன. இவ்வுயிர்கள் முறையே , இடை உயிர்களாகும். பிறிதொரு உயிரான அகரம் நடுவிடத்தாழ் உயிராகும். (பிற இடங்களில் காணப்படும் இடைவெளிகளில் வேற்றுநிலை உயிரொலியன்கள் வழங்காத காரணம்பற்றி, அவ் இடைவெளிகளை நோக்கி இவ் உயிரொலியன்கள் நகர்ந்து செல்லக் கூடும். இதன் விளைவாக புதிய வேற்று நிலையில் வழங்கும் உயிரொலியன்கள் - சேய்மொழியிலும் கிளைமொழிகளிலும் தோன்றியுள்ளன போன்று - உருப்பெற்று எழக்கூடும்.) இந்த ஒலியனியல் அமைப்பானது திராவிட மொழிகளின் பொதுக் கூற்றை  (Common core) அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டுள்ளது. இன்றைய



11. உலக ஒலியியற் கழக ஒலி அட்டவணையை ( International Phonetic Chart), இப்பகுதியைப் படிக்கும் பொழுது நினைவிற் கொள்ள வேண்டும்.
12. M. B. Emeneau :

(Mimeograph) - An indroductory course in the comparativeDravidian -Phonologygiven at the Summer School of Linguistics held at Coimbatore in 1959.