பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

240

கருமம்
பாவனை

கந்தம்
நரகர்
அநித்தம்
துக்கம்

திருக்குறளில் இடம்பெறும் சமஸ்கிருதச் சொற்கள் பலவற்றுள் மூன்று வருமாறு :

ஆதி

[குறள் 1]

பகவன்

[குறள் 1]

பாக்கியம்

[குறள் 1141]

பதினெண்கீழ்க்கணக்கு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஸ்மிருதி (smrtis)களிலிருந்து வந்த சொற்கள் காணப்படுகின்றன. ஆரம்பகாலப் பல்லவ அரசர்களின் செப்புப் பட்டயங்கள் கூடப் பிராகிருத மொழியில் வெளியிடப்பட்டன. கி.மு. ஏழாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைப் பிராகிருத மொழிக் காலம் எனக்கருதலாம்.

சமஸ்கிருத மொழிக் காலம்

தமிழகம் சமஸ்கிருதக் கல்வியின் மையமாதல்

கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்குச் சற்று முன்னர் இருந்தோ சமஸ்கிருதத்தின் உண்மையான பாதிப்புக் காலம் தொடங்குகிறது. தென்னகம் சமஸ்கிருதக் கல்வியின் மையமானது. இரண்டாம் இராசசிம்மனின் அவைக்களத்தில் தண்டி முனிவர் இடம் பெற்றிருந்தார். பின் சங்கரரும் அவருக்குப் பின்னர் இராமாநுசரும் அக்காலத் தமிழகத்திலிருந்து தங்களது கோட்பாட்டினைப் பரப்ப நாட்டின் பிற பாகங்களுக்குச் சென்றனர். சங்கரரும் பிறரும் ‘திராமிடசாரியா’ (Dramidacarya) என்பவரைக் குறிப்பிட்டுள்ளனர். இக்காலகட்டத்தின் தொடக்கத்தில் செப்புப் பட்டயங்கள் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டன. இக்காலத்திலேயே இந்து சமயம் வலிமை பெறுகிறது. சமஸ்கிருதத்தில் காணப்படும் சைவ, வைணவ நூல்களில் சில தென்னகத்தில் தோன்றியிருக்கலாம். தென்னகத்தில் காணப்படும் மகாபாரதமே மிகவும் நீண்டதாகும். அதன் நீட்சிக்குக் காரணமான சேர்க்கைகள் தென்னகத்திலிருந்து வந்திருக்கலாம்.