|
தமிழ் மொழி வரலாறு 241
அரசியல் மற்றும் சமய,
தத்துவச் செல்வாக்குகள்
இவ்விரு
மொழிகளுக்கு இடையேயான உறவு அரசியல் செல்வாக்குடன் தொடங்குகிறது. பின்வருவன போன்ற
சொற்கள் தமிழில் இடம் பெறுகின்றன.
சபை >
sabha
(சமஸ்கிருத வடிவம்)
கணம்
> gana
(சமஸ்கிருத வடிவம்)
சதுர்வேதிமங்கலம்
பின்னர் சமயச்
செல்வாக்கால், சடங்குகள் மற்றும் கோயில் தொடர்பான பல சொற்கள் புகுந்தன.
அர்ச்சனை > arcane
(சமஸ்கிருத வடிவம்)
ஈச்சுரன் > isvara
(சமஸ்கிருத வடிவம்)
விட்டுணு > Visnu
(சமஸ்கிருத வடிவம்)
அரசர்களின் சமஸ்கிருதப்
பெயர்கள்
அரசர்கள் பலரின்
பெயர்கள் தெளிவான சமஸ்கிருதப் பெயர்களாகும்.
சான்று :
ந்ருபதுங்கன்
ராஜராஜன்
ராஜேந்திரன்
குலோத்துங்கன்
இராசேந்திர
சோழனின் வட இந்தியப் படை எடுப்புகளுக்குப் பின்னர், ஆகமங்களைக் கற்ற சைவ அந்தணர்கள்
பலர் வங்காளத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தனர். ஒட்டக்கூத்தரின் பாடல்களில் பல
தாந்திரிகச் (tantric)
சொற்கள் தமிழாக்கப்பட்டுள்ளன.
மணிப்பிரவாள நடை
பதினோராம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடை என வழங்கப்பட்ட புதிய நடைப்போக்கு
தமிழகத்தில் தோன்றியது. மாலையில் மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத்
தொடுக்கப்பட்டதைப் போலத் தமிழ்த் தொடர்களையும் சமஸ்கிருதத் தொடர்களையும் மாற்றி
மாற்றிக் கட்டிய நடைப்போக்கே மணிப்பிரவாள நடையாகும். மலையாளத்தில் ஏற்பட்டது போலத்
தமிழ்க் கவிதையுலகில் இந்நடை ஆழமாக வேரூன்றவில்லை. சமஸ்கிருதத்தில் உள்ளதுபோல
ஆழ்வார்களின்
|