பக்கம் எண் :

தம
 

தமிழ் மொழி வரலாறு

242

உடனிதமிழ்ப்பாக்களில், வேறு கலப்பின்றி இறைச் செய்தியின் முழுச் சாறும் அமைந்திருப்பதாக வைணவர்கள் கூறுவர். உபநிடதங்களிலும் புராணங்களிலும் உள்ள சமஸ்கிருதத் தொடர்களை ஆழ்வார்களின் தொடர்களைக் கொண்டு வைணவர்கள் விளக்குவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமஸ்கிருத அறிஞர்களுடன் இவ்வாறு உரையாடுவதற்கு மணிப்பிரவாள நடை பயனுள்ளதாயும் செறிவுமிக்கதாயும் இருந்தது. இத்தகைய மணிப்பிரவாள நடையில் பல சமஸ்கிருதத் தத்துவச் சொற்கள் இடம் பெறுவது இயற்கையே. 13, 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் இந்நடையின் செல்வாக்கு உச்சநிலையை அடைந்தது. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும்கூட இந்நடை வழக்கிலிருந்தது. சைவர்களும் இந்நடையைப் பின்பற்றினர். ஆனால் அவர்களது மணிப்பிரவாளம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டதாகும்.

மேலும் பல சமஸ்கிருதச் சொற்கள்

புராணங்களும், வேறு பல நூல்களும் சமஸ்கிருதத்திலிருந்து அவ்வப்போது தமிழாக்கப்பட்டன. திருப்புகழிலும், தாயுமானவர், வில்லிபுத்தூரார் ஆகியோர் பாடல்களிலும் சமஸ்கிருதத் தொடர்களும் தொகைகளும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கின்றன. அக்காலத்திய சாதாரண மக்களின் பேச்சுத் தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் எவ்வாறு புகுந்தன என்பதை தே நோபிலியின் தமிழ் நூல்கள் காட்டுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் தமிழ் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ இப்போக்கையே காட்டுகிறது.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் தூய்மை

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘தமிழ்மொழித் தூய்மை’ (Purist Movement) இயக்கம் ஒன்று தோன்றியது. அவ்வியக்கம் இன்றுகூடக் காணப்படுகிறது. அவ்வியக்கம் பிறமொழிச் சொற்களுக்கு, அதிலும் குறிப்பாக வடமொழிச் சொற்களுக்கு எதிரான இயக்கமாகும். பரவலாக ஆட்சியிலுள்ள, தேவையான பிறமொழிச் சொற்களைக்கூட விட்டுவிட வேண்டும் என அவ்வியக்கத்தினர் கூறுவதைப் பலர் ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம்; ஆனால் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத, தேவையற்ற பிற மொழிச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். எது எப்படியாயினும் சரி, இந்திய அறிவுலகத்தின் பொது மொழியாகத் திகழும் சமஸ்கிருதம் - இந்தியாவின் ஏனைய