பக்கம் எண் :

New Page 6
 

தமிழ் மொழி வரலாறு

243

மொழிகளைப் போலன்றித் தமிழ் குறைந்த அளவில் தேவையான போது தகுந்த கலைச் சொற்களைப் பெறுகின்ற - நிலைத்ததொரு களஞ்சியமாகத் தொடர்ந்து திகழ்கிறது; கடந்த காலத்தில் இருந்த அளவுக்கு இல்லையாயினும், வருங்காலத்திலும்கூடச் சமஸ்கிருதம் இவ்வகையில் தொடர்ந்து அத்தகையதொரு களஞ்சியமாகவே இருந்து வரக்கூடும்.

தமிழ் ஒலியன் அமைப்பில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு

பல்லவர் காலத்திலிருந்து அறிஞர்கள் சமஸ்கிருதச் சொற்களைத் தமிழில் சமஸ்கிருத உச்சரிப்புடனே உச்சரித்திருக்க வேண்டும். இதன் விளைவாக அறிஞர்களின் தமிழில் புதிய வேற்றுநிலை வழக்குகள் தோன்றின. சமஸ்கிருத ஒலிகள், அதிலும் குறிப்பாக ஒலிப்புடை ஒலிகள், மூச்சொலிகள், குழிந்துரசொலிகள் முதலியன தமிழில் ஒலியன் நிலையைப் பெற்றன. ஆனால் இது இலட்சக்கணக்கான சாதாரண மக்களின் மொழியைப் பாதித்திருக்காது. ஆனால் இன்று கிராமப்புறங்கள் நீங்கலாக, பெருகி வரும் படித்த மக்களிடத்தில் ‘p நு b’, ‘k நு g’ போன்ற ஒலிகளுக்கு வேற்றுநிலை வழக்குகள் வளர்ந்து வருகின்றன.

சான்று : pavam, bhavam

Kuru, guru

இப்போக்கு சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதன் விளைவேயாகும்.

i) தமிழாக்க முறை நிலைபெறுதல் : ஒலியன்கள்

சமஸ்கிருதத்திலிருந்து விரிவாகக் கடன் வாங்கப்படுவதன் விளைவாக, பிற மொழிச் சொற்களைத் தமிழாக்கும் முறை தொடர்பாக ஒரு நடைமுறை அல்லது பொது விதியினை நிறுவும் இன்றியமையாமை ஏற்பட்டது. இதன் விளைவாக எழுந்த விதிகளை பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பவணந்தியார் தமது நன்னூலில் தொகுத்துத் தருகிறார்.27 அடியில் கூறப்படுவன இலக்கிய மொழிகளுக்கே உரியன.

பிராகிருதத்தில் நிகழ்வது போல ரகர (r) மெய்யானது ‘இரு’ அல்லது ‘இ’ என்றாகியது.

rsi > iruti (இருடி)
rsabha > itavam (இடவம்)



27. நன்னூல், 146 - 150.