|
தமிழ் மொழி வரலாறு 245
ஆனால் பழைய இலக்கிய
வழக்கில் இது கடையண்ண நெடில் வெடிப்பொலியால் குறிக்கப்படுகிறது. இது பிராகிருதச்
சான்றைப் பின்பற்றுவதன் விளைவாகலாம்.
ak
> akkam
(அக்கம்)
வருமுறை - முன்வைப்பு
உயிர்
இடைக்காலத்தில் பிற்பகுதிவரை மொழி முதல் குறிலசைக்குப் பின்னர் லகர, ரகர மெய்கள்
வருவதில்லை. எனவே அவ்விடத்தில் அவற்றுக்குப் பின்னர் உகரமெய் வருகிறது.
Sarkara
> carukkarai
(சருக்கரை)
இங்ஙனமே
இரட்டிக்கும் சமஸ்கிருத வெடிப்பொலிகளுக்குப் பின்னரும் உகர உயிர் வருகிறது.
vag
> vakku
தமிழில் மொழிமுதல்
ர், ல், ய ஆகியன வாரா. எனவே இவ்வொலிகளுடன் தொடங்கும் சமஸ்கிருதச் சொற்கள் தமிழில்
வரும் பொழுது அவற்றுக்கு முன்னர்த் தொடக்க காலத்தில், அகர முன்வைப்புயிர் இடம் பெற்றது;
பின்னர் இகரம் இடம்பெறத் தொடங்கியது.
ratna
> arattanam
(அரத்தினம்)
> irattinam (இரத்தினம்)
raga
> aragam
(அராகம்)
>
irakam
(இராகம்)
இவ்விரு
வடிவங்களும் இலக்கியத்தில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ரகர மெய் முன்உயிரால்
தொடரப்படுமாயின் இகர முன்வைப்பு உயிர் இடம் பெறுகிறது.
repam
> irepam
(இரேபம்)
ரகர மெய் பின்
உயிரால் தொடரப்படும் பொழுது உகர முன்வைப்பு உயிர் வருகிறது.
ruci
> uruci
(உருசி)
லகர மெய்
அகரத்தாலோ, முன் உயிராலோ தொடரப்படும் பொழுது இகர முன்வைப்புயிர் வருகிறது.
lehyam
> ilekiyam
(இலேகியம்)
|