|
தமிழ் மொழி வரலாறு 246
லகர மெய்
பின்உயிரால் தொடரப்படும் பொழுது உகர முன்வைப்புயிர் வருகிறது.
loha
> ulokam
(உலோகம்)
யகரத்துக்கு
முன்னர் இகர முன்வைப்புயிர் இடம் பெறுகிறது.
yaksa
> iyakkan
(இயக்கன்)
ஆனால் சங்க
இலக்கியங்களில் கூட ‘யவனர்’, ‘யூபம்’ என்னும் சொற்களுக்கு முன்னர் முன்வைப்புயிர்
காணப்படவில்லை. பிற்காலத்தில் ‘யு’ என்பதற்கு முன்னர் உகர முன்வைப்புயிர் இடம்
பெறுகிறது. ஆனால் இச் சூழலில் பலவிடங்களில் யகர மெய் இழக்கப்படுகிறது.
|
yuddha |
> |
uyuttam |
> |
uttam |
(உயுத்தம் >உத்தம்) |
|
yukti |
> |
uytti |
> |
utti |
(உத்தி) |
iv ) மெய்மயக்கம் :
இகரச் சுரபத்தி
தமிழில் வாரா
வடமொழி மெய்மயக்கங்கள் இரு வழிகளில் அமைக்கப்படுகின்றன.
1.
ஓரினமாதல்
2.
சுரபத்தி
ர், ல், ய்,
என்பவற்றுடன் சேர்ந்து வரும் மெய்களைப் பிரிக்க இகரச் சுரபத்தி இடம் பெறுகிறது.
|
brahman |
> |
piraman |
(பிரமன்) |
|
plava |
> |
pilava |
(பிலவ) |
|
bhagya |
> |
pakkiyam |
(பாக்கியம்) |
ஒலிச்சேர்க்கையில்
இரண்டாவது ஒலி வகர அல்லது மகர மெய்யாய் இருக்குமாயின் உகரச் சுரபத்தி இடம்பெறுகிறது.
|
padma |
> |
patumam |
(பதுமம்) |
|
pakva
|
> |
pakkuvam |
(பக்குவம்) |
|
karma
|
> |
karumam |
(கருமம்) |
மெய்களுக்கிடையில் நெகிழ்வு மாற்றத்துடன் (loose
transition) விரைந்தொலித்தலால் தமிழில் மெய்மயக்கங்கள் வரும்பொழுது சுரபத்தி தொடர்பான விதிகள்
செயல்படுகின்றன.
paruntu
>
prantu >
pirantu
|