|
தமிழ் மொழி வரலாறு 259
எனவே அன்றைய துன்பமிக்க நாட்களில் வாழ்வின்
இன்றியமையாத இருதுறைகளாகிய இசை ( பலவகைப்பட்ட பாத்திரங்கள் தேவைப்படும் ) உணவு( கள் )
ஆகியவற்றில் மராத்தி மொழியின் பாதிப்பு இருந்தது. கடன் பெறப்பட்ட சொற்கள் அடையும்
மாற்றங்களை ஆராய்கையில் பின்வரும் செய்திகள் தெரிய வருகின்றன. குற்றியலுகரத்தை உடைய
தமிழ்ச் சொற்களின் வாய்பாட்டு வடிவத்தைக் கடன் பெறப்பட்ட சொற்களும் பெறுகின்றன.
வெடிப்பொலி அல்லது பிற மெய் முடிவுகளுடன் உயிரொலிகள் பொதுவாகச் சேர்க்கப்படுகின்றன.
மனிதனைக் குறிக்காத சொற்கள் பால் வேறுபாடின்றி அஃறிணையில் வருகின்றன. சிலவிடங்களில்
இதற்கு விதிவிலக்கு உண்டு.35
ஆங்கில
ஆட்சியின் பொழுதும் நிர்வாகத் தொடர்பான பல உருதுச் சொற்கள் வழக்கில் இருந்தன;
இன்றும் அவை வழக்கில் உள்ளன.
|
தமிழ் |
|
உருது |
|
துமல்
~
தும்பல் |
< |
dumbal
‘வரியிலி நிலம்’ |
|
நஜர்
~
நசர் |
< |
nazir
‘
நீதிமன்ற
தகவல்
அறிவிப்பாளர்’ |
|
சராய் |
< |
sharai
‘காற்சட்டை’ |
|
கோரி |
< |
gor
‘சமாதி’ |
பல சொற்கள் இவ்வாறு
வழக்கில் கலந்துள்ளன. சிலவற்றைக் கடன் வாங்கியவை என்றே சொல்ல இயலாது.
|
கெடுபிடி |
< |
garbar |
|
கெவு
~
கெழுவு
|
> |
Khewa
‘
சரக்கு
எடுத்துச் செல்வதற்கான கப்பற்
கட்டணம்’ |
|
கைதி |
< |
Qaidi |
|
சப்பரம் |
< |
cafpar |
|
சராசரி |
< |
sarasari |
|
சிலாமணி
~
செலவாணி |
< |
calaoni |
|
சாட்டை
~
சாட்டி |
< |
jati |
|
35.
Ganeshsundaram, P. C. and Subramoniam,
V. I. :
‘Marathi Loans in Tamil’,
IndianLinquistics,
Vol.
14, 1954.
|
|