பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

260

சாமான்

>

saman

சாலேசுரம்

>

calisa

சீனி

>

cina

சுக்கான்

>

sukkan

சேடை

>

jede

சீட்டு (சீட்டுக்கவி)

>

citthi

தயார்

>

taiyar

‘ராவுத்தர்’, ‘சலாம்’ முதலான சொற்கள் தமிழ்ச் செய்யுளில் இடம் பெற்றுள்ளன.

சமஸ்கிருதச் சொற்களை மிகுதியும் உடையது என்ற முறையிலேயே இந்தி உருதுவிலிருந்து வேறுபட்டது. எனவே இந்தியையும் உருதுவையும் ஒன்றாகவே கொள்ளலாம். தமிழ்ப் பேரகராதி தமிழில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட உருதுச் சொற்களைத் தருகிறது. ஆனால் இத்தொகையை விட மிகுதியான சொற்கள் வழக்கில் உள்ளன. நடுவண் அரசு ஆங்கிலத்தோடு இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதாலும், நம் பள்ளிச் சிறுவர்கள் கீழ் வகுப்புக்களிலேயே இதனைக் கற்றுக் கொள்ளத் துவங்கியிருப்பதாலும் காலப் போக்கில் மேலும் இந்திச் சொற்கள் தமிழில் வந்து சேரலாம்.

மேலை நாட்டு மொழிகள்

போர்த்துக்கீசியம்

மேலை நாட்டார் 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவிற்கு வரத் தொடங்கினர். முதலில் வந்தவர்கள் போர்த்துக்கீசியர். அவர்கள் கிழக்கிந்தியாவில் பல குடியேற்றங்களை ஏற்படுத்தினர். அவ்விடங்களின் பெயர்களுடன் ‘பறங்கி’ என்பது முந்துநிலையாக வழங்குவதால் அவ்விடங்களை அடையாளங் கண்டு கொள்ளலாம்.

சான்று : பறங்கிப்பேட்டை

பறங்கிமலை

பறங்கிமலையில் 1522 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியர் குடியேற்றத்தை ஏற்படுத்தினர். ‘பறங்கி’ என்ற சொல் ‘frank’ என்னும் சொல்லிலிருந்து வந்ததாகும். சிலுவைப் போர்களுக்குப் பின்னர் இச்சொல் ‘ஐரோப்பியர்’ என்ற பொருளில் வழங்கலானது.