|
தமிழ் மொழி வரலாறு 261
போர்த்துக்கீசியரே
தமிழகத்திற்கு வந்த முதல் மேலைநாட்டவர்; எனவே அவர்கள் ‘பறங்கியர்’
என்றழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்த பொருள்கள் இங்குள்ள பொருள்களிலிருந்து
வேறுபட்டவை; எனவே ‘பறங்கி’ என்ற முன்னொட்டோடு அவை வழங்கப்பட்டன.
சான்று :
பறங்கித்தாழை (அன்னாசிப் பழம்)
பறங்கிக்காய்
தமிழ்ச் சித்த
மருத்துவத்தின் குறிக்கத்தக்க சிறப்பு இயல்பு நஞ்சைப் பதங்கமாக்கலாம். இங்ஙனம்
பதங்கமாக்கப்பட்டது பறங்கி வைப்பு எனப்பட்டது. ஆல்புகெர்க்(Albuquerque)கின்
ஆட்சியின் கீழ்ப் போர்ச்சுக்கீசியர், இந்தியப் பெண்களை மணம் புரிய ஊக்கிவிக்கப்
பெற்றனர். ஆனால் இது சமுதாயத்தின் நலனுக்குப் பயனளிக்காது போனது வருந்தத் தக்கது.
‘பறங்கி’ என்னும் சொல் ‘branco’ என்னும் சொல்லுடன் பாமர மொழி விளக்கப் போக்கால் ஒன்றென மயங்கப் பெற்றது. ‘branco’ என்பது ஒரு வகை மேக நோயைக் குறிக்கும் சொல்லாகும். ‘பறங்கிப் புண்’ என்ற சொல் இனக்
கலப்பால் பிறந்த மேக நோயுடைய இனத்தைக் குறிக்கலானது. எனவே தான் தெ நோபிலி தம்மைப்
‘பறங்கியர்’ என்றழைத்ததை எதிர்த்தார்.
16 ஆம்
நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் கீழைநாட்டுக் கடற்படையினரை வெற்றி கொள்ளப்
பயன்படுத்திய பெரிய துப்பாக்கி புரட்சிகரமான ஆயுதமாகக் கருதப்பட்டது. எனவே இதற்குப்
‘பீரங்கி’ என்ற பெயர் வந்தது. இது பறங்கி என்ற சொல்லோடு தொடர்புடையது. தமிழ்ப்
பேரகராதி இச்சொல்லை ‘firangi’
என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் குறிக்கிறது.
இரண்டாவது
கட்டத்தில், தமிழ்ச் சொற்களுடன் ‘பரங்கி’ என்னும் முந்து நிலையைச் சேர்த்து
வழங்குவதற்குப் பதில் போர்த்துக்கீசிய சொற்களே இடம் பெறலாயின. யேசு சபையைச் சேர்ந்த
பாதிரியார்கள் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டனர். போர்த்துக்கீசியராயினும் சரி
அல்லது இந்தியராயினும் சரி, கிறித்துவப் பாதிரியார்கள் போர்த்துக்கீசிய வாழ்க்கை
முறையைப் பின்பற்றினர். இதன் விளைவாகவே ‘போர்த்துக்கீசிய - தமிழ்’ அகராதிக்கான
தேவை ஏற்பட்டது. கிறித்துவச் சமயச் சடங்குகளுக்குப் புதிய சொற்கள் தேவைப்பட்டன.
|