|
தமிழ் மொழி வரலாறு 26
போல14
மூலத் திராவிடத்தின் மெய்யொலியன் பட்டியலிலேயே மொழிக்கு முதலிலும் இடைநா இடையண்ண
மூக்கொலியையும் கொள்ள வேண்டும். சிலர் கருதுவது போல இடைநா இடையண்ண மூக்கொலியை யகர
மெய்யின் அல்லது நகர மெய்யின் மாற்றொலியாகக் கொள்ள முடியாது. இடைநா இடையண்ண
மூக்கொலியைப் போலக் கடையண்ண மூக்கொலியும் மொழி முதலில் வருகிறது. ஆனால் இது கடையண்ண
வெடிப்பொலியால் தொடரப்படும் பொழுது பிற மூக்கொலிகளே கடையண்ண மூக்கொலிகளாவதன்
விளைவாகும்.
னகர மெய்யானது நுனிநா
நுனியண்ண வெடிப்பொலிக்கு முன்னர் நுனிநா நுனியண்ண மூக்கொலியாகவும் நுனிநாப் பல்
வெடிப்பொலிக்கு முன்னர் நுனிநாப்பல் மூக்கொலியாகவும் இருந்திருக்கலாம். எமனோ
குறிப்பிட்டமூன்று மூக்கொலியன்களுடன், இடைநா இடையண்ண மூக்கொலியனையும் சேர்த்து மொத்தம்
நான்கு மூக்கொலியன்கள் எனக் கொண்டாலும் நுனிநாப் பல் மூக்கொலியும் கடையண்ண
மூக்கொலியும் இடச்சார்பாக மாறும் வெறும் மாற்றொலிகளாகவே
(
Positional
Variants) உள்ளன.
ஈருயிர் இடையில் தனி
வெடிப்பொலிகளும் (
Short Plosives) இரட்டித்த வெடிப்பொலிகளும் (
Long Plosives) வேற்று நிலை வழக்கில் (
Contrastive Distribution) வருகின்றன. எனவே வெடிப் பொலிகளில் ‘நீட்சி’
(Length) ஒலியன் தன்மையதாகும். தனி
வெடிப்பொலிகளும் இரட்டித்த வெடிப்பொலிகளும் மூக்கொலி-வெடிப்பொலி மயக்கங்களுடனும்
(
Clusters) வெடிப்பொலிகட்கு முன்னர் வரும் இன மூக்கொலிகளுடனும் வேற்று நிலை வழக்கில் வருகின்றன.
விகுதிகளைப் ( Suffixes) பற்றி ஆராய்வதற்கு
இம்மெய்ம் மயக்கங்கள் மிகவும் முக்கியமானவை. ல், ர், ழ், ற் முதலியவற்றை அடுத்து
வெடிப்பொலிகள் வருவதால் ஏற்படும் மெய்ம் மயக்கங்களில் இருந்து இரட்டித்த
வெடிப்பொலிகள் தொடக்கத்தில் தோற்றம் பெற்றிருக்கலாம்.15
|
14.
T. Burrow :
BSOAS, Vol. XI, Part III, p
604.
15.
Bh.
Krishnamurthi :
Telugu Verbal Bases,
p 74,
1961.
V. Venkatarajulu Reddiar :
Tamil Collamaippu,
p 63, 1956.
|
|