|
தமிழ் மொழி வரலாறு 27
எமனோவின் கருத்துப்படி மொழிக்கு இடையில்-ப்-வருவதில்லை. ஏனெனில் மொழிக்கு இடையில் அது வகர மெய்யாக
மாறிவிடுகிறது. ஆனால் ‘தபு’ போன்ற தமிழ் வேர்ச் சொற்கள் மூலத் திராவிட மொழியிலும்
-ப்-ஐக் கொள்ள இடந்தருகின்றன.
எமனோ ஆழ்ந்த
ஆய்வுக்குப் பின்னர் (மிகுத்த கவனத்துடன்) இரு மெய்களுக்கு(ர், ற்) இடமளித்துள்ளாரெனினும்
ஆடொலியை நுனியண்ண வெடிப்பொலியிலிருந்து வந்ததாகக் காட்டலாம்; மூலத் திராவிட
மொழியின் காலத்திலேயே இவ்வளர்ச்சி நேரிட்டது எனக் கொண்டாலும் கூட ஆடொலியை நுனியண்ண
வெடிப்பொலியின் மாற்றொலியாகக் கொள்ளலாம்.16
நுனியண்ண மருங்கொலிக்கும் (
Lateral) நாவளை மருங்கொலிக்கும் அவர் இடம் தருகிறார். ஒலிப்புடை நாவளை உரசொலியும் உள்ளது.
தமிழ், மலையாளம் ஆகியவற்றில் மட்டும் இது தொடரொலியாக
(
Continuant) உச்சரிக்கப்படுகிறது. யகர, வகர மெய்யொலிகளுக்கும் மூலத்திராவிட மெய்யொலியன்
பட்டியலில் இடந்தரப்பட்டுள்ளது.
ட், ற், ண், ல், ள்,
ழ், ர் தவிர ஏனைய ஒலியன்கள் மொழி முதலில் வருகின்றன. எல்லா ஒலியன்களும் ‘மொழி
இறுதியில்’ வருகின்றன. வெடிப்பொலியன்கள் இப்போது மொழி இறுதியில் உகரம் பெற்று
முடிதலுமுண்டு.
மூலத்திராவிட மொழி
அசையின் வாய்பாடு “(மெய்) நெடில் உயிர் (மெய்)” என இருந்திருக்கலாம். தெலுங்கு, கூய்
போன்ற சில மொழிகளில் மொழி முதலில் உள்ள மெய்ம் மயக்கங்கள் ‘ஒலி இடம்
பெயரலின்’ ( Metathesi) விளைவாகலாம்.
எனவே தொடக்கத்தில் மொழி முதல் மெய்ம் மயக்கங்கள் இருக்கவில்லை எனக் கொள்ளலாம்.
தொடக்க காலத்தில் இவ்வசையானது ஹாக்கெட் ‘
anzrcyeyrdk’ என்ற சொல்லில் உயிரொலி
வாராது மெய்யொலி உச்சரிப்புக்களே நெகிழ்வோடு அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியது
போலவே கோட்டா மொழியிலும் மெய்ம் மயக்கங்கள் அமைந்துள்ளன.17
இடையில் வரும் உயிரொலிகள்
|
16.
M. B. Emeneau :
Comparative Dravidian Phonology
(Mimeograph ).
17.
C. F. Hockett :
A Manual of Phonology,
p. 58,
1953.
|
|