|
தமிழ் மொழி வரலாறு 28
மெய்ம் மயக்கங்களின் இடையே
காணப்பெறும் நெகிழ்வுகளைச் சுட்டுபவையாக அமைந்து அசை முதல் அசைவாக தோன்றுகிறது. ‘அசை முதல்
அசை உச்சி’ (
Onset Peak type) வகையைச் சேர்ந்ததாக
இருந்தது என்பதை இதுவே காட்டுகிறது.
இங்குக் கொள்ளப்பட்டது
போல, மொழி முதல் மெய்ம் மயக்கங்கள் கொள்ளப்படாவிட்டால், அசையானது அசை முதலையும்
உச்சியையும் உடையதாகும். அது ஒரு அசையீற்றைக் (
Coda) கொண்டும் அல்லது கொள்ளாமலும்
இருக்கலாம். ஈருயிர்களுக்கு இடையில் உள்ள மெய், அடுத்துள்ள உயிருடன் அசை முதலாக அமைகிறது.
இருமெய்கள் உயிர்களுக்கு நடுவில் வருமாயின், அவற்றில் முதலாவது, முந்தைய அசையின் அசையீறாகும்.
அடுத்த மெய் அடுத்த உயிரின் அசை முதலாகும். ஹாக்கெட் சுட்டிக் காட்டுவது போல இத்தகைய
அசைகளில் ‘இடைவருவன’ (
Interludes) இருப்பதில்லை
என்பது குறிக்கத்தக்க கூறாகும்.18
அசையீறு தெளிவாகப் பிரிக்கப்பட்டு மெய் ஒலியாக வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அசைமுறை வரிவடிவமும்,
திராவிட யாப்பியலும் இத்தகைய கருத்துக்கு ஆக்கம் தருகின்றன. இம்முடிவிற்கு எதிரான சான்றுகளை
‘இடம் பெயரல்’ என்ற விதிப்படியோ, ‘இடை உயிர்களின் இழப்பு’ என்றோ விளக்கி விடலாம்.
இக்கோட்பாடு கோட்டா மொழியில் ‘அசை முதல்’ அமைப்பு வளர்ந்துள்ளதையும் விளக்கும்.
கோட்டா மொழியில் காணப்படும் இப்போக்கு திராவிட மொழிகளில் உயிரொலிகள் ஒலிப்பு
நிலையில் வெறும் விடுப்பொலிகளாகவே (
releases) ஆகின்றன என்பதற்குச் சான்றாகும். இந்த ‘அசை முதல் அசை உச்சி’ அமைப்பு ஏற்றுக்
கொள்ளப்படுமாயின் முதல் அசையிலேயே ஒரு காலத்தில் ‘அசை முதல்’ இருந்தது என்பது உண்மையாகலாம்.
ஞ், ய், ச் முதலியன மொழி முதலில் சில சமயங்களில் மறைவதை நாம் அறிவோம். திராவிட
மொழிகளின் வேர்ச் சொல் அகராதி தரும் செய்திகளைக் கொண்டு இவை மேலும் ஆராயத்தக்கவை.
திறப்பசைகளும் (
Open syllable) மூடசைகளும் (
Closed
syllable) உண்டு. மீட்டுருவாக்கப்பட்ட வடிவத்தில் மூன்று
அசைகள் இருக்குமாயின், வேரிலிருந்து மூன்றாவதாக உள்ள அசையை விதியாகக் கொள்ளலாம்.
(சான்று : ‘பெருகு’ என்பதில் உள்ள ‘-கு’) ய், ர், ல், ள், ழ், வ் ஆகியவற்றுடனோ
அல்லது அவையன்றியோ அ, இ, உ ஆகிய
|
18.
C. F. Hockett :
A Manual of Phonology, p.
58, 1953.
|
|