பக்கம் எண் :

உய
 

தமிழ் மொழி வரலாறு

29

உயிர்களை உடைய விகுதியின் பிறிதொரு அடுக்கு இருக்கலாம். இதையும் நீக்கினால், எஞ்சியிருப்பது ஓரசையுள்ள வேராகும். (சான்று : பெர்-உ-) ஓரசைகளிலும் கூட மெய்களை, அவற்றுடன் சேர்ந்துள்ள உயிருடனோ உயிரன்றியோ, விகுதி எனப் பிரிக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு எதுவும் கூறுவது, ஊகஞ் செய்வதன் எல்லைக்கே கொண்டு போய்விடும், திராவிட மொழி ஆராய்ச்சி இன்றுள்ள நிலையில் இதைப் பற்றி எவ்வித முடிவுக்கும் வரமுடியாது.

மொழிக்கு முதலில் வரும் ஞகர மெய்க்குப் பதில் சிலர் யகர மெய் இருப்பதாகக் கொள்வர். மூக்கொலியால் தொடரப்படும் பொழுது இவ் யகரம் ஞகரமாகிறது. இவர்கள் ஞகரத்தை நகரத்தின் மாற்றொலி என்பர். இது எவ்வாறாயினும், மூலத் திராவிட மொழியில் ஞகர மெய்க்கு ஒலியன் நிலை கொடுக்கப்பட்டுள்ளது. பிற்காலத்து மொழி நிலையைக் குறிப்பன என்ற முறையில் இவ்வளர்ச்சிகளெல்லாம் பின்னர் ஆராயப்படும். யூல்ஸ் பிளாக் கூறுவது போல ஒலியியலின்றி உருபனியல் வரலாறு இல்லை.

2 உருபனியல்

இங்குக் கோடிட்டுக் காட்டப்பெற்ற ஒலியனியல் அடிப்படையில் உருபனியல் பற்றிய சில பொதுவான செய்திகளை இங்குக் கூற முயலலாம். சுட்டுப் பெயர்களில் ( Personal Pronouns) னகர விகுதி ஒருமையையும் மகர விகுதி பன்மையையும் குறிக்கின்றன. இதே தன்மை உடைய படர்க்கைப் பெயர்ப் பதிலிகளும் உண்டு. ஆனால் பின்னர் அவை தற்சுட்டுப் பெயர்ப்பதிலிகளாக ( Reflexive Pronouns) ஆகிவிட்டன. தொலைவில் உள்ள பிராகூய் மொழியிலும் இந்நிலையே உள்ளது. திணை, பால், எண் இவற்றைப் பொறுத்த வரையில் தென் திராவிட மொழிகள் உயர்திணையில் ஆண்பால் ஒருமையையும் பெண்பால் ஒருமையையும் வேறுபடுத்துகின்றன. அஃறிணையில் இவ்வேறுபாடு காட்டப்படுவதில்லை. ஆனால் வட, மத்திய திராவிட மொழிகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் உயர்திணை, அஃறிணை என்ற அடிப்படையில் அல்லாமல் ஆண்பால், ஆண்பால் அல்லாதன என்ற அடிப்படையிலேயே பாகுபாடு இருந்திருப்பது தெரியவரலாம். பெண்பால் ஒருமை ஆண்பால் நீங்கலாக உள்ள பிறபால் ஒருமையில் அடங்கியது. ஆகையால் தமிழிலும், கன்னடத்திலும் இன்றுள்ள பால்காட்டும் முறை மெல்ல மெல்ல வளர்ந்த நிலையாகும். இவ்வளர்ச்சிக்கு