தமிழ் மொழி வரலாறு 30
இடைப்பட்ட நிலைகளைப் பிற
திராவிட மொழிகளில் காணலாம். பெண்பால் முதலில் உயர்திணைப் பன்மையில் புகுந்து பிற
அஃறிணைப் பெயர்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் வண்ணம் பெண்பாற் பெயர்கள் வேற்றுமை ஏற்க
வந்த வடிவங்களைப்பெற இடமளித்தது. பின்னர் உயர்திணைக்குள்ளேயே பெண்பால் ஒருமை ஆண்பால்
ஒருமையிலிருந்து வேறுபட்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிந்திய வேற்றுமை ஏற்க வந்த
வடிவங்களை மூலத்திராவிட மொழி அடைகொளி என்ற அமைப்பு முறையாகக் கொண்டிருந்திருக்கலாம்.
திராவிடமொழி ஆராய்ச்சிகளின் இன்றைய வளர்ச்சி நிலையில் இதற்கு
மூலத்திராவிடத்தின் உருபனியல் அமைப்பையும் தொடரமைப்பையும் பற்றிக்கூற முயல்வது வெறும்
கற்பனையாகவே முடியும்.
திராவிட மொழிகள்
ஒட்டு நிலை மொழிகளாகும். இம் மொழிகளைப்பற்றி நாம் இரண்டாவதாகக் கூறத்தக்க கருத்து
இம்மொழிகளின் உருபனியல் அமைப்புக்களின் தெளிந்த தன்மையையும் இலக்கணத்தின்
முறைமையையும் பற்றியதாகும்.19
யூல்ஸ் பிளாக் குறிப்பிடுவது போல “இம் மொழிகளின் ஒலியியல் விதிகள், சொல்லின்
உறுப்புக்கள் ஒன்றோடொன்று பிணைந்து விடாது நிற்க அனுமதிப்பதால் அவை வெளிப்படையாகத்
தெரியும் வண்ணம் நிற்கின்றன.”20
ஒட்டுநிலை என்ற சொல்லானது, மொழிவரலாற்றின் ஒரு நிலையைக்
குறிக்கவும், ஒட்டுத் தன்மையுடைய மொழிகளின் குடும்ப உறவை நிறுவவும் பயன்படுகிறது. ஆனால்
இவ்விரு பொருள்களும், மறுக்கப்பட்டாலும் கூட மொழிகளின் ‘அமைப்புவழி ஆய்வுக்கு’ (Typological
Studies of the Languages) இச்சொல்லைப் பயன்படுத்துவதால் தீமை ஏதும் இல்லை.
பிறிதொரு
செய்தியையும் இங்கே குறிப்பிட வேண்டும். பெயர், வினை என்று பகுப்பு நிலவாத பழங்காலத்து
இலக்கண அமைப்பை ஓரளவு அறிந்து கொள்கிறோம் என்பது அது. ஆனால் இதுவும் நம்மைத்
தொடரியலுக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்து வாக்கியங்கள் பெயர்த்தன்மையுடையன என்று
முன்னரே குறிப்பிடப்பட்ட இயல்பை உறுதிப்படுத்துவதாகவும் அமையக்கூடும். திராவிட மொழி
ஆராய்ச்சி இன்றுள்ள நிலையில் இதற்கு எதுவும் கூறுவதைத் தவிர்ப்பதே நல்லது.
19.Jules Bloch :
The Grammatical Structure of Dravidian
Language p i;
1954.
20.
Jules Bloch :
The Grammatical Structure of Dravidian
Language p i;
1954.
|
|