தமிழ் மொழி வரலாறு 31
3.தென் திராவிட மொழிகளும்
தமிழும்
1 திராவிட மொழி
ஆராய்ச்சியின் இன்றைய நிலை
திராவிட மொழி ஆராய்ச்சி இன்றுள்ள நிலையில், ஆராய்ச்சி
அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முக்கியமான செய்தியை ஆராயவேண்டும்.
இந்தோ-ஐரோப்பிய மொழி மூலத்தைச் சார்ந்தவையே என முடிவு கட்டமுடியாத சில சமஸ்கிருதச்
சொற்கள் உள்ளன. அவற்றுள் பல சொற்கள் திராவிட மொழி மூலத்தையும், சில சொற்கள் முண்டா
மொழி மூலத்தையும் சார்ந்தவை என விளக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறும் விளக்கப்படமுடியாத
சில சொற்கள் எஞ்சுகின்றன. அவை, இன்று வழக்கில் இல்லாத, அக்காலத்துப் பழங்குடியினர் பேசிய
மொழிகளிலிருந்து வந்திருக்கலாம். மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதமொழி இவ்வாறு கடன்
வாங்கியுள்ளதென்றும் தென்னகத்துடன் தொடர்பு ஏற்பட்டவுடன் இக்கடன் வாங்கல் முற்றிலுமாக நின்றுவிட்டது
என்றும் பர்ரோ வலியுறுத்துகிறார்.1
வட இந்தியப்பகுதிகளில் வாழ்ந்த திராவிட மொழிகளைப் பேசுவோரிடமிருந்து இச்சொற்கள்
கடன் பெறப்பட்டன என்பதே இக்கூற்றின் பொருளாகும். எனவே இக்கடன் வாங்கல்கள் வடதிராவிட
மொழிகளை மீட்டுருவாக்கப் பயன்படும். தென் திராவிட மொழிகளைப் பொறுத்த வரையில்
வடமொழியாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்வதைவிட, இவற்றில் மிக அதிகமான திராவிட வேர்ச்
சொற்களைக் காணமுடியும். இந்தத் தென் திராவிட மொழி வேர்ச் சொற்களும், வடதிராவிட
மொழி வேர்ச் சொற்களும் உறவுடையன என்பதைக் காட்டி விட்டால் தெற்கத்திய வடிவங்கள்,
அதிலும் குறிப்பாகத் தமிழ் வடிவங்களே எல்லாச் சமயங்களிலும் மூலத்
1.T.
Burrow :
Sanskrit and the Pre - Aryan Tribes and Languages”Reprinted from the Bulletin
of the Ramakrishna Mission Institute of Culture, Calcutta, p, 4, Feb
.
1958.
|
|