பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

264

பிரெஞ்சுச் சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் உச்சரிப்பு, பிரெஞ்சிலிருந்து இது வந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

‘லாந்தர்’ என்ற சொல் ‘lanterne’ என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்து வந்தது. ‘பின்தூர்’ என்ற சொல் ‘peinture’ என்பதிலிருந்து வந்தது. ‘தம்பூர்’ என்ற சொல் ‘tambour’ என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்து வந்தது. ‘ரோஜூவடி’ என்பது ‘rouge’ என்பதிலிருந்து வந்தது.

பிரெஞ்சு அரசு அதிகாரிகளின் பெயர்கள் பிரெஞ்சுப் பெயர்களேயாகும். கம்யூன்கள் (Communes) ஷெரிப்புகளின் (sheriffs) கீழும், போலீஸ் இலாகா குமுசியர் (> commissaire) கீழும் உள்ள பிரெஞ்சு அரசாங்க முறையை இச்சொற்கள் நினைவுபடுத்துகின்றன. ‘குமுசியர்’ என்ற சொல்லிலுள்ள இரண்டாவது உகரம், மொழியிடைக் குற்றியலுகரமாகும். இது இகரத்துக்கு மிகவும் நெருங்கி உள்ளது. இரவுக்காவலைக் குறிக்க வழங்கும் ‘ரோந்து’ அல்லது ‘லோந்து’ (ரகர லகர மாற்றம் பேச்சு வழக்கின் விளைவாகும்) என்னும் சொற்கள் ‘ronde’ என்ற பிரெஞ்சுச் சொல்லை நினைவு படுத்துகின்றன. ஆங்கிலேய அரசாங்கம் இந்திய ஆட்சிப்பொறுப்பை 1857 ஆம் ஆண்டில் ஏற்பதற்கு முன்னர், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இந்தியாவை ஆண்டனர். அவர்கள் ‘கும்மினியான்’ என அழைக்கப்பட்டனர். இச்சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்திருக்கலாம்.

ஆங்கிலம்

ஆங்கிலேயர்கள் தங்களது கிழக்கிந்தியக் கம்பெனியின் வழியாகப் பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவுடன் வணிகம் செய்யத் தொடங்கினர். அவர்களது தொடக்ககாலக் குடியேற்றங்களில் சென்னையும் ஒன்றாகும். அன்று முதல் ஆங்கிலச் சொற்கள் தமிழுக்கு வந்து கொண்டே இருக்கின்றன.

ஆட்சித்துறைச் சொற்கள் பல ஆங்கிலத்திலிருந்து வந்துள்ளன.

கவர்னர் > governor
பொலீசு ¥ போலீசு > police

‘ஒலி அழுத்தம்’ (stress) தமிழர்களால் ‘நெடில்’ (length) என உணரப்பட்டது. ஏனெனில் தமிழில் ‘ஒலி அழுத்தமுறை’ கிடையாது.