பக்கம் எண் :

சட
 

தமிழ் மொழி வரலாறு

265

சட்டத் தொடர்பான ஆங்கிலச் சொற்கள் பல தமிழில் இடம் பெறுகின்றன. ‘ஜட்ஜூ’ என்ற சொல் ‘judge’ என்பதிலிருந்து வந்தது. மொழியிறுதிக் குற்றியலுகரத்தை நோக்குக. இது பலவிடங்களில் இகரமாகிறது. எனவே பழைய வடிவமான ‘ஜட்ஜூ’ என்பதும், பிந்திய வடிவமான ‘ஜட்ஜி’ என்பதும் ‘கட்டற்ற அல்லது நிபந்தனையற்ற மாற்றத்தில்’ வருகின்றன. மொழியிறுதி மெய், இடையண்ண மெய்யாக இல்லாது கடையண்ண மெய்யாக இருந்த பொழுதிலும் இம்மாற்றம் நிகழ்கிறது. ஈரங்கி > hearing மொழி முதல் ‘h’ இழக்கப்படுகிறது. உகர முடிவுக்குப் பதில் இங்கு இகர முடிவு வருகிறது. ஆங்கிலத்தில் மொழியிறுதியில் ‘s’, ‘t’, ‘p’ என்பன வருமாயின் மாற்றமெதுவும் இல்லை. ‘அவிள வெட்டு’ > affidavit உயிரிடையில் ‘f’ ‘v’ என மாறுகிறது. ‘will’ என்பதிலிருந்து ‘உயில்’ என்பது வருகிறது. ‘w’ என்பது வகரமாகிப் பின்னர் யகர உடம்படு மெய்யாகிறது. ‘மவுண்டு’ < (amount) நீதிமன்றக் கட்டணம். இவ்வாறு mount என்பது குறிப்பிட்ட ஒரு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஒலி அழுத்தமில்லாத பொழுது மொழி முதல் அகரம் இழக்கப்படுவதைக் காண்க. தரணி < attorney என்பதையும் நோக்குக. இடைப் பின் உயிர் தமிழில் அகமாகிறது. கீழ் முன் உயிரும் இவ்வாறே அகரமாகிறது. ‘bank’ என்பது பாங்கு ~ வாங்கு > வங்கி’ என்றாகிறது. ‘draft’ என்பது ‘திராபு’ அல்லது தெராபு அல்லது துராபு என்றாகிறது. இங்கு வெடிப்பொலிக்கு முன்னர் வரும் ‘f’ ஒலிப்பிலா வெடிப்பொலியாக ஓரினமாக்கப்படுகிறது. மொழியிறுதியிலுள்ள தகரம் இழக்கப்படுகிறது.

இராணுவச் சொற்களும் ஆங்கிலத்திலிருந்து வந்துள்ளன. பட்டாளம் > battalion. தமிழில் பெரும்பாலான அஃறிணைப் பெயர்கள் ‘அம்’ என்பதில் முடிகின்றன. இதனோடு ஒப்புமையாக ‘battalion’ என்பதிலுள்ள ஈற்றசை ‘அம்’ எனக் கேட்கப்பட்டது.

தில்லெரி > artillery
துருப்பு > troop
துருப்பு (சீட்டுக்கட்டில் உள்ளது) > trump

trump’ என்பதிலுள்ள மகர மெய் தமிழில் கேட்கப்படவில்லை. இங்ஙனமே சிமிட்டி < cement. ஆனால் ‘சிமிண்டு’ என்ற பிற்காலத்திய வடிவமும் உண்டு. ‘சார்வு (< serve) + ஆதல்’ >