|
தமிழ் மொழி வரலாறு 273
[கடைசி இரு
சொற்களிலும் இரட்டித்த நுனியண்ண வெடிப்பொலிக்கு முன்னர் இடையண்ண ஒலிகள் வாராமையை
நோக்குக.]
பாலாறு பாயும்
பகுதியில் ‘நெல்லின் பக்கத்தில் நின்றது’, ‘வீட்டின் பக்கத்தில் நின்றது’ என்பதற்குப்
பதிலாக முறையே ‘நெல்லுக்கா நின்றது’, ‘வீட்டுக்கா நின்றது’ என்னும் மரபுத் தொடர்கள்
வழங்குகின்றன.
வட்டாரமெதனையும் குறிப்பிடாமல் தாம் ‘இழிந்தவை’ எனக் கருதும் பின்கண்ட வழக்குகளை அவர்
குறிப்பிடுகிறார்.
| 1. |
இவனை-ப்-பார்க்க
> இவனை-ப்-பாக்க [வேரின் இறுதியிலுள்ள ரகர மெய்
மறைகிறது.]
|
| 2 |
இங்கு > இங்காக்க;
அங்கு > அங்காக்க, [‘ஆக்க அசை நிலை’ சேர்க்கப்பட்
டுள்ளது.] |
| 3. |
சேற்று நிலம் >
சேத்து நிலம்; ஆற்று-க்-கால் > ஆத்து-க்-கால் [ற்ற் >
த்த்] |
| 4. |
இப்படிக் கொத்த >
இப்படிக் கொற்ற
அப்படிக் கொத்த >
அப்படிக் கொற்ற
(த்த் > ற்ற்
இது போலி நாகரிக ஆக்கத்தின் விளைவாகலாம். மேலே
எண் 3 இல் குறிப்பிட்டவற்றோடு
இதனை ஒப்பிட்டுக் காண்க.) |
| 5. |
வாழை-ப்-பழம் >
வாயை-ப்-பயம்
கோழி முட்டை >
கோயி முட்டை (ழ் > ய்) |
| 6. |
உயிர் > உசிர்;
மயிர் > மசிர்(ய் > ச்) |
முன்னரே
குறிப்பிட்டது போலச் சகர மெய்யே பழமையானதாகும். ஆனால் இலக்கிய மொழியில் யகர மெய்
உடைய வடிவத்தைப் பயன்படுத்தக் காண்கிறோம். ஆனால் உரையாசிரியர், இதனை அறியாத சாதாரண
மக்கள் மொழியைத் தவறாகப் பயன்படுத்துவதாக முடிவு கட்டியதால் சகர மெய்யுள்ள வடிவத்தைத்
தவிர்க்க வேண்டும் என்கிறார்.
பெருந் தமிழ்நாடு
இலங்கைத் தமிழையும்
இத்துடன் சேர்த்து ஆராய வேண்டும். இலங்கைத் தமிழில் உள்ள கிளைமொழிகள் பின்வருமாறு :
|