|
தமிழ் மொழி வரலாறு 274
1. யாழ்ப்பாணக்
கிளைமொழி
2. மட்டக்களப்புக்
கிளைமொழி
3. தென்கிழக்கு
இலங்கையின் கிளைமொழி
4. இசுலாமியர்களின்
கிளைமொழி
5. கொழும்பு நகரின்
கிளைமொழி
மேலேயா,
பர்மா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டுத் தமிழர்களின் கிளைமொழிகளும் உள்ளன. மொழி
முதல் வகர மெய்யை விட்டுவிடும் ‘திகலவர்’ (Tigalavar)
எனப்படும் பெங்களூர்த் தமிழ்க் குடியானவர்களின் திகளு (Tigalu)
கிளைமொழி, பெங்களூர் அரிசனங்களின் கிளைமொழி, மைசூரின் சங்கேதி (Sanketi)
கிளைமொழி, ஹெப்பர்(Hebbar)
மண்டயம் பிராமணர்களின் கிளைமொழி, ‘பெண்டாட்டி’ என்ற சொல்லைப் ‘பெண்’ என்ற அதனுடைய
பழைய பொருளிலேயே இன்றும் வழங்கும் ஆந்திராவில் குடியேறிய பிராமணர்களின் செகந்திராபாத்
கிளைமொழி முதலியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
இக்காலத் தமிழ் வட்டாரக்
கிளைமொழிகள்
‘இருக்கிறது’
அல்லது ‘இருக்குது’ என்ற வடிவங்களுக்குப் பதிலாக, இசுலாமியச் செல்வாக்கால், ‘கீது’ என்ற
வடிவம் வட ஆர்க்காட்டில் அதிலும் குறிப்பாக வேலூரில் வழக்கில் உள்ளது. இது அவ்வட்டாரக்
கிளைமொழியின் தனி இயல்பாகும். வழக்கெல்லைகளைக் (lsoglosses)
குறிப்பிடும் கிளைமொழி வரைபடங்கள் வரையப்படாததால், இங்குக் கூறப்படும் கிளைமொழி
வழக்குகள் வழங்குமிடங்களின் எல்லைகளை உறுதியாக வரையறுக்க முடியாது. பழைய ழகர மெய்யின்
பல்வேறு மாற்றங்கள் தமிழின் மாறுபட்ட கிளை மொழிகளின் சிறப்பியல்புகளாக உள்ளன.
சென்னைத் தமிழில் ழகர மெய் யகர மெய்யாகிறது.
சான்று : பழம்
> பயம்
வடஆர்க்காட்டுத் தமிழில் ழகர மெய் சகர மெய்யாகிறது.
சான்று : இழு >
இசு
தென்
ஆர்க்காட்டுத் தமிழில், அதிலும் குறிப்பாகச் சிதம்பரத் தமிழில் ழகர மெய் ஷகர
மெய்யாகிறது.
சான்று :
திருவிழா > திருவிஷா
தென்
மாவட்டங்களில் இலங்கையிலும் ழகர மெய் ளகர மெய்யாகிறது.
|