|
தமிழ் மொழி வரலாறு 275
சான்று : பழம் >
பளம்
‘அவர்கள்’ என்ற சொல்
பிராமணர்களின் தமிழில் ‘அவா’ அல்லது ‘அவாள்’ எனவும், வடஆர்க்காட்டுத் தமிழில்
‘அவுங்க’ எனவும், கோவை, நெல்லை மாவட்டத் தமிழில் ‘அவிய’ எனவும் வழங்குகிறது. முன்னரே
குழிந்துரசொலியாகிவிட்ட மொழி முதல் இடையண்ண ஒலியின் ஒலிப்புடைமை மதுரைத் தமிழின்
தனித்தன்மையாகும்.
சான்று : று :
saman
> jaman
எண்பதை ‘எண்பளது’
ணு
‘எம்பளது’ என உச்சரிப்பது தென் தஞ்சைத் தமிழின் சிறப்பியல்பாகும். பழைய ஆய்தத்தின்
இடத்தில் ளகர மெய் வந்திருக்கக் கூடும். ‘பந்தல்’ என்ற சொல் இறந்தவர்களின் வீட்டின்
முன்னால் போடப்படும் பந்தலையே குறிக்கும் குறுகிய பொருளில் வழங்குவது செட்டி நாட்டுத்
தமிழின் தனி இயல்பாகும். செயல் முடிவதைக் குறிக்க ‘இடு’ அல்லது ‘விடு’ என்னும்
துணைவினைக்குப் பதில் ‘போடு’ என்னும் துணைவினையைப் பயன்படுத்துவது கோயமுத்தூர்த் தமிழின்
சிறப்பியல்பாகும்.
புதிய ஒலியன்களின்
வேற்றுநிலை வழக்குகள்
கிளைமொழிகளிடையே காணப்படும்
வேறுபாடுகளால், ஒரு கிளைமொழியில் உள்ள வேற்றுநிலை வழக்கு பிறிதொன்றில் இருப்பதில்லை.
‘வால்’, ‘வாள்’ என்னும் வேற்றுநிலை வழக்குகள் லகர, ளகர மெய்களை ஒலியன்களாக்குகின்றன.
ஆனால் ஈரோட்டுக் கிளை மொழியில் இவை வேற்றுநிலை வழக்கில் வருவதில்லை. தென்
மாவட்டங்களில் ழ், ள் என்பன வேற்றுநிலை வழக்கில் வருவதில்லை. நாஞ்சில் நாடு நீங்கலாக
ஏனைய இடங்களில் ரகர மெய்யும் றகர மெய்யும் வேற்றுநிலை வழக்கில் வருவதில்லை. ஞகர, னகர
மெய்கள் கோவை, சேலம் ஆகிய இடங்களில் வேற்றுநிலை வழக்கில் வருவதில்லை. ஙகர மெய்
நாஞ்சில் நாட்டில் தனி ஒலியனாக வருகிறது. ‘அங்ஙனம்’, ‘அங்கணம்’ (anganam)
என்னும் வேற்றுநிலை வழக்கு இதற்குச் சான்றாகும். ‘ε’
‘ஓ’
ஆகிய ஒலிகள் பல வட்டாரங்களில்
வேற்றுநிலை வழக்கில் வருகின்றன. காயல்பட்டினம் இசுலாமியர்களின் தமிழில் ‘ஓ’,
‘எ’
ஆகியன வேற்றுநிலை வழக்கில் வருகின்றன.
சான்று :
vஓngi
(= வாங்கி)
venge
(= வேங்கை)
கல்லூரி மாணவர்களின்
தமிழில் *f,
p,
(ப்) என்னும் ஒலிகள் ‘coffee’,
‘copy’ என்னும் சொற்களில் வேற்று நிலை
|
*
ஒலிப்பிலாப் பல்லிதழ்ப் பிளந்துரசொலி
|
|