|
தமிழ் மொழி வரலாறு 276
வழக்கில் வருகின்றன. படித்த இசுலாமியர்களின் தமிழிலும், இந்தியில் புலமை பெற்ற அறிஞர்களின் தமிழிலும்
‘z’
‘j’ ஆகியன வேற்றுநிலை வழக்கில் வருகின்றன.
சான்று :
zamin , jamun
புதிய உயிரொலியன்கள்
ஆனால் இவற்றின் வழக்கு மிகவும் குறைவு.
எனவே இவை பிறமொழிக்குரியன என்பதைக் கண்டு கொள்ளலாம்.
உயிரொலிகளிலும் புதிய வேற்றுநிலை
வழக்குகள் தோன்றுகின்றன. ஒரு காலத்தில் ஒலி மாற்றமாக இருந்தது பிறிதொரு காலத்தில்
ஒலியன் மாற்றமாகி விடுகிறது. உகரத்தைப் பொறுத்த வரையில் இப்படிப்பட்ட மாற்றத்தைக்
காண்கிறோம்.
சான்று : குத்து (பெயராக)
: குத்து (ஏவலாக)
மொழியிடை உகரம் சிலவிடங்களில்
அகரமாகக் குறிக்கப்படுகிறது. பழந்தமிழில் எகரம் மொழி முதலிலும், இடையிலும் வழங்கியது.
ஆனால் பின்னர் எகரம் மொழியிடையில் வருவது நின்றது. அவ்வாறு வருவதாகக் கொண்டாலும்,
அந்நிலையில் அதற்கு வேற்றுநிலை வழக்குகள் இல்லை. இப்போக்கு மொழிமுதல் எகரத்திற்கும்
பரவியது. மொழி முதலில் எகரத்திற்கும் அகரத்துக்குமிடையே ‘கட்டு’ அல்லது ‘நிபந்தனையற்ற
மாற்றம்’ சில கிளைமொழிகளில் காணப்படுகிறது. இது எவ்வாறாயினும் சரி, எகரம் தொடர்ந்து
ஒலியனாகவே உள்ளது. ஐ > எ > ε
என்னும் மாற்றம் குறிக்கப்பட்டுள்ளது. உயர்ச்சியுடனோ (heightening) அல்லது உயர்ச்சியின்றியோ அகரம் முன் உயிர் ஆவதும் குறிக்கப்பட்டுள்ளது. ‘ε’
‘எ’ என்பவற்றுக்கிடையில் சில
கிளை மொழிகளில் வேற்றுநிலை வழக்குகள் உள்ளன.
உயிரால் தொடரப்படாத பொழுது
இகரமும் உகரமும் முறையே எகரம் ஒகரமாக மாறுவதை முன்னரே குறிப்பிட்டோம். ‘இவன்’,
‘முட்டை’, ‘முற்றம் > முத்தம்’ முதலான வழக்கு மிகுதியுடைய சொற்களில் இம்மாற்றங்கள்
நிகழ்வதில்லை. மாற்றம் நிகழ்ந்தால் கிடைக்கும் வடிவங்களான ‘எவன், மொட்டை,
மொத்தம்’ முதலியன முன்னரே வேறு பொருள்களைக் குறிக்க வழங்குகின்றன. எனவே ‘பல பொருள் ஒரு
சொல்லாகி’ ‘பொருண் மயக்கம்’ வந்து விடுகிறது. எனவேதான் இம்மாற்றங்கள் ஏற்படவில்லை.
|