பக்கம் எண் :

ஈர
 

தமிழ் மொழி வரலாறு

277

ஈரிதழ் ஒலிக்கு முன்னரும் நாவளை ஒலிக்குப் பின்னரும் வரும் பொழுது எகரம் (இகரத்திலிருந்து எகரமாக மாறிய எகரமும்) ஒகரமாகிறது.

சான்று : பெண் > பொண்ணு

மிடா > மெடா > மொடா மொடா

ஒரு சொல் குற்றியலுகரத்தில் முடியுமானால் அதற்கு முந்திய அசையிலுள்ள உகரம் குற்றியலுகரமாகிறது. ‘திரும்பு’, ‘துரும்பு’ முதலிய சொற்களை நோக்குக. இச்சூழல்களில் சுரபத்தி இகரம் குறுகி குற்றியலிகரமாகிறது; மேலும் அது நடுவிடத்து உயிராகிறது. ஆனால் சமீபகாலத்தின் கடன் வாங்கப்பட்ட சொற்களில் இம் மாற்றங்கள் நிகழ்வதில்லை.

சில கிளைமொழிகளில் மொழிமுதல் உயிர் உச்சரிக்கப்படும் முறையானது, அசை அமைப்பில் மாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய போக்கைச் சுட்டிக் காட்டுகின்றது. பழங்காலத்திலிருந்து முதலசை தவிர ஏனைய அசைகளிலெல்லாம் ‘அசைமுதல்’ இருந்தது. ஆனால் முதலசையிலும் இத்தகைய அமைப்பு மெல்ல இன்று வளர்ந்து வருகிறது. மொழி முதல் முன் உயிர்கள் சோழர் காலத்திலேயே யகர உடம்படு மெய்யைப் பெறலாயின. மொழி முதலில் பின் உயிர்கள் வகர உடம்படு மெய்யைப் பெறுவதை 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கால்டுவெல் குறித்துள்ளார். சில இடங்களில் இது ‘w’ என இருக்கலாம். இம்மாற்றங்கள் மொழி முதல் அகரத்தை (ஐகார ஆகாரங்களையும்) மட்டுமே பாதிக்கவில்லை. பல கிளை மொழிகளில் அகரம் அல்லது ஆகாரத்துக்கு முன்னர்க் குரல்வளை ஒலி வருகிறது. முதலசையில் வரும் உடம்படு மெய்களின் வருகையைக் கணித்து விடலாம்; எனவே அவை இன்றைய நிலையில் ஒலியனாகமாட்டா.

மூக்கொலி உயிர்கள்

தமிழ் உயிரொலிகளின் இரண்டாவது பெரிய வளர்ச்சி மூக்கொலி உயிர்கள் தோன்றியதாகும். மூக்கொலி உயிர்கள் முன்னரே இருந்திருக்க வேண்டும்.6 தொல்காப்பியர் காலத்திலேயே மொழியிறுதி மகர, னகர மெய்கள் ஒன்றாகியமை அவற்றுக்கு முந்திய உயிரொலிகள் மூக்கொலிச் சாயல் பெற்றதன் விளைவாக நிகழ்ந்திருக்கலாம். மொழி இறுதி மூக்கொலி (மெல்லின



6. T. P. Meenakshisundaran : Indian Linguistcs, Poona.