பக்கம் எண் :

New Page 4

தமிழ் மொழி வரலாறு


278

மெய்) மறைவதை உயிர்மூக்கொலிச் சாயல் பெறுவது விளக்கக் கூடும்.

மரம் ~ மரம்1*
மரன் ~ மர1

எனவே ‘மரம் ¥ மரன்’ என்றாகிறது.

பிற மொழியாளர்களின் குறிப்புக்கள்

தமிழ்ச் சொற்களின் உச்சரிப்புக்களைப் பிற மொழியாளர்கள் கேட்ட முறையானது, உயிரொலிகள் மூக்கொலிச் சாயல் பெற்றது உட்படச் சில மாற்றங்களை விளக்கமாக உணர்த்தும், ‘தரங்கம்பாடி’ என்ற சொல்லில் உள்ள நாவளை டகர மெய்யை உச்சரிக்க முடியாமல், அதை ரகர மெய்யாகப் போர்ச்சுக்கீசியர் உச்சரித்தனர். உச்சரிப்பு முறையில் டகர மெய்க்குப் பெரும் பான்மையும்--ஒத்த போர்ச்சுக்கீசிய ஒலி ரகர மெய்யேயாகும். ‘தூத்து-க்-குடி > Tuticorin’ என்பதையும் நோக்குக. ‘பா’ என்ற நெடிலசையை அடுத்து வரும் இகர உயிர், பிற மொழியாளர்களால் சரியாகக் கேட்கப்படாதிருக்கலாம். தர - என்பது முன்னரே விளக்கப்பட்டது போல ‘த்ர்’ என்னும் மெய்ம் மயக்கமாகிறது. மகர மெய்க்குப் பின்னர் பகரம் b எனும் ஒலிப்புடை வெடிப்பொலியாகிறது. மூக்கொலிகளுக்குப் பின்னர் வரும் ஒலிப்பிலா வெடிப்பொலிகள் ஒலிப்புடை வெடிப்பொலிகளை மாற்றொலியாகப் பெற்றுள்ளன. ஆங்கிலத்திலுள்ள முதல் ஒலி அழுத்தமானது (accent) முதலசையை நெடிலசையாக்குகிறது. ‘அம்’ என்பது மூக்கொலிச் சாயல் பெற்ற அகரமாகிறது. மூக்கொலிச் சாயல் பெற்ற உயிரொலிகளைத் தனி ஒலியனாகப் பெறாத மொழியினர், அவ்வொலிகள் பிற மொழிகளில் வரும் பொழுது அவற்றை உணர்ந்து கொள்ள இடர்ப்படுகின்றனர். எனவே ‘Tranquebar’ என்ற வடிவம் கிடைக்கிறது. nk - என்ற மெய்மயக்கம் ng - என்றாகாதது அந்நிய மொழியின் ஒலியன் அமைப்பின் விளைவாகும்.

நாட்டுப்புற இலக்கியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகங்களில் சமுதாயத்தின் கீழ்மட்ட மக்களின் பேச்சுமொழி இடம் பெற்றது உயிரொலி மூக்கொலிச்சாயல் பெறுவதைக் குறிப்பதற்குக்



* இப்பகுதியில்‘1’ என்னும் குறியீடு மூக்கொலிச் சாயல் பெறுவதைக்
குறிக்கும்.