பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

280

தாகும். பிறமொழிச் சொற்கள் வழக்கு மிகுந்தது இந்நிலைக்குரிய அடிப்படையான காரணமாகும்.

kuru pavam tekku setti
guru bavam dekkusa jetti

ஆனால் இச்சொற்களெல்லாம் கிராமப் புறங்களில் இன்னும் ஆட்சி பெறவில்லை என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். மதுரையில் ‘s’ ‘j’ என்பன ஒன்றாகின்றன. எனவே ஒலிப்புடை வெடிப்பொலிகளைப் பற்றி மேலே கூறப்பட்ட செய்தி நகர்ப்புறங்களில் வாழ்வோர், கற்றோர் ஆகியோரைப் பொறுத்த வரையில் மட்டுமே உண்மையாகும். அங்கும் கூட இப்போக்கைத் தடுத்தாட் கொள்ளும் இலக்கிய மொழியின் தாக்கத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

பழந் தமிழில் தவிர்க்கப்பட்ட மெய்ம்மயக்கங்கள் விரைந்தொலித்தலில் அல்லது கடன் வாங்கப்பட்ட சொற்களில் இடம் பெறுகின்றன.

கட்டில் < கட்லு
திருகு < த்ர்’ கு
ஓடட்டும் < ஓட்’டும் (odtum)

சுப்பு (Subbu) [‘சுப்பிரமணியன்’ என்பதன் சுருங்கிய வடிவம்]
 

டப்பா < (dabba)
சத்தம்< (saddam)
மட்டி < (maddi)

மூன்று மெய்கள் மயங்கி வருதலும் உண்டு. முதலிரண்டு மெய்களுக்கும் மூன்றாவது மெய்க்கும் இடையில் (loose transition) நெகிழ்வு மாற்றமிருக்கலாம். விரைந்தொலித்தலால் மெய்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகி விடுவதுண்டு.

Mann’le'' என்பதை pull’le என்பதுடன் பின்வருவனவற்றில் ஒப்பிட்டாராய்க
pale
palle
pall’le
pane
pann
e

panninay> pannine > pann’ne > pann’ne