பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

281

மெய்யொலிகள் மொழி முதலில் வருவது தொடர்பாக இருந்த கட்டுப்பாடுகள் மறைகின்றன. ர், ல், d (ஒலிப்புடை டகர மெய்) முதலியன மொழி முதலில் வருகின்றன. இது ‘ரண்டு > இரண்டு’ என்பது போன்ற போலி ஆக்கத்திற்கு வழி வகுக்கிறது. இயற்சொற்களிலும் மொழி முதலில் வரும் ஒலிப்பிலா ஒலிகள் சிலவிடங்களில் ஒலிப்புடை ஒலிகளாகின்றன. சில கிளை மொழிகளில் ‘s > j’ மாற்றமும் நிகழ்கிறது.

சான்று : Kutirai (குதிரை)

Guidirai (குதிரை)

மெய்யொலிகளின் இருவகைப் பாகுபாடு

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உச்சரிப்பியலில் ஒரு புதிய போக்கு நிலைபெற்றுள்ளது. இடையண்ண ஒலி, கடையண்ண ஒலி, நுனியண்ண ஒலி, நுனிநாப் பல்லொலி என்ற பாகுபாட்டிற்குப் பதில், மெய்கள் முன், பின் என்று இருவகையாகப் பாகுபடுத்தப் படுகின்றன. இது செக் நாட்டு அறிஞர் சுவலபெல் (Kamil Zevlebil) தந்துள்ள சில மெய்கள் பற்றிய விளக்கங்களிலிருந்து வளர்ச்சியுற்ற கருத்து ஆகும்.

க் ச்
ட் த்
ள் ல்
ழ் ய் (?)
ஷ் ஸ்
ங் ஞ்
ண் ன்
ர்ர் [ற்] ர் (?)

ஆடொலியும் சாதாரண ரகர மெய்யும் வேற்றுநிலை வழக்கில் வரவில்லையாயின், லகர மெய் பின்னொலியாகவும் அதற்கு இணையான முன்னொலியாக ரகர மெய்யும் இருக்கலாம். ‘ய்’ என்பது ‘இய்’ என்றோ அல்லது ‘யி’ என்றோ ‘ல்’ என்பதன் மாற்றாக வருவது முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. அப்படியாயின் அந்நிலையில் அதை மெய்யொலிகளின் கீழ்ச் சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை.

பல கிளைமொழிகளுக்கும் பொதுவான அமைப்பு

பல கிளைமொழிகளுக்கும் பொதுவான அமைப்பைப் பற்றி மட்டுமே நாம் பேசமுடியும். இங்குத் தரப்படும் தமிழின் ஒலியன்